இடமாற்றத்துக்கு கையூட்டு இரண்டு கோடி!
அண்மையில் மும்பையின் சூதாட்ட விடுதி ஒன்றில் பயங்கரவாத தடுப்புக் காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 12 கிலோ ஹெராயின் எனப்படும் போதைப்பொருள் சிக்கியது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட விக்கி ஓபராய் என்பவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில் இதன் பின்னணியில் போதைத் தடுப்பு பிரிவு இயக்குநராக சண்டீகரில் பணியாற்றிய ஷாஜி மோகன் என்பவர் இருப்பது தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த டிசம்பர் 31ம்தேதி கொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
ஷாஜி மோகன் என்ற அந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு இயக்குநரிடன் விசாரணை நடத்தியபோது, சொந்த மாநிலத்துக்கு பணி இடமாற்றம் பெறுவதற்காக தான் கடன்பட்டு இரண்டு கோடி இலஞ்சம் தந்ததாகவும் அந்தக் கடனை அடைக்கவே போதைபொருள் கடத்தியதாகவும் ஒத்துக்கொண்டுள்ளார்.
அவரிடம் மேலும் 70 கிலோ ஹெராயின் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
வேலியே பயிரை மேயும் இந்தியாவில்..
பதிலளிநீக்குரெண்டுகோடி கொடுத்து ஒரு எடத்துக்கு மாறி வர்றான்னா, அதுல எவ்வளவு 'லாபம்' இருக்கோணும்?
நெம்ப கேவலம், நெம்ப கேவலம்!!