அரசியல் வானில்: மனிதநேய மக்கள் கட்சி பிப்.7ல் உதயம்.
Published on செவ்வாய், 3 பிப்ரவரி, 2009
2/03/2009 11:01:00 PM //
அரசியல்,
தமிழகம்,
Politics,
Tamilnadu
தேர்தல் அரசியலில் பங்கு பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தன் ஆதரவில் மனிதநேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை பிப்ரவரி 7ம் தேதி துவக்குகிறது. இதற்கான துவக்கவிழா தாம்பரத்தில் நடக்கிறது.
இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நிருபரிடம் கூறுகையில்,
தமுமுக ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு 7ம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்பட இருக்கிறது. துவக்க விழா மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.என்றார்.
கட்சியின் பொதுச் செயலாளராக அப்துல் சமது, பொருளாளராக ஹாரூன் ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமுமுக சமூக சேவை அமைப்பாக தொடர்ந்து செயல்படும்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் செயல்படலாம்.
ராமநாதபுரம், வேலூர், நெல்லை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். அவற்றில் எதாவது இரண்டு தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்
0 comments