ஆசியாவின் தூய்மை கிராமம் மெளலினாங்
Published on சனி, 31 ஜனவரி, 2009
1/31/2009 01:39:00 PM //
இந்தியா,
மெளலினாங்,
மேகாலயா,
India,
Mawlynnong,
Megalaya
மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரிலிருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மெளலினாங் என்ற கிராமம் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
"டிஸ்கவரி இந்தியா" எனும் புகழ்பெற்ற சுற்றுலா இதழில் பணிபுரியும் இத்துறை வல்லுநர்களால் இந்த கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அழகிய இந்த கிராமத்து மக்கள்
தங்கள் கிராமத்தை தூய்மை படுத்துதல், சாலைகளில் செடிகளை வளர்த்து அதனைப் பராமரித்து வருதல் என்று அரசை எதிர்பார்க்காமல் தாங்களாகவே செய்து கொள்கின்றனர். சிறு குழந்தைகள் கூட இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். குழந்தைகள் குப்பைகளை சாலைகளில் போடுவது இல்லை.
மூங்கிலால் பிண்ணப்பட்ட கூடைகளை கிராமத்தின் முக்கிய இடங்களில் வைத்து அதில் மட்டுமே குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.
நமது கிராமத்தையும் அழகிய கிராமமாக ஆக்க முயல்வோம்.
0 comments