ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் மீது குண்டர் சட்டம்
Published on செவ்வாய், 27 ஜனவரி, 2009
1/27/2009 11:16:00 PM //
இந்தியா,
தீவிரவாதம்,
மங்களூர்,
ஸ்ரீ ராம் சேனா,
India,
Mangalore,
Sri Ram Sena
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த சனிக்கிழமை இரவு கேளிக்கை விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் மீது ஸ்ரீராம் சேனை என்ற அமைப்பினர் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் துணைத் தலைவர் பிரசாத் அட்டவார் உள்பட 27 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குண்டர் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வர முடியாது. மேலும் அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே காவல் துறையின் காவலில் 6 மாதத்திற்கு வைத்திருக்க முடியும்.
பிணையில் வர முடியாத எட்டு வழக்குகள் கைது செய்யப்பட்டவர்கள் மீது பதிவு செய்துள்ளதாகவும் கர்நாடக மேற்கு சரக டி.ஐ.ஜி கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க இவர்கள் மீது குண்டர் சட்டதத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
0 comments