இஸ்ரேலை ஐ.நா.விலிருந்து விலக்க வேண்டும் - துருக்கி
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத ஒரு நாட்டை ஐ.நா. சபையின் தலைமையத்திற்குள் எவ்வாறு அனுமதிப்பது என்று துருக்கி பிரதமர் எர்தோகான் கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ஹமாஸ் இயக்கத்தினரைத்தான் குறி வைத்து தாக்குகிறோம் என்ற பெயரில் பொதுமக்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் காஸா மீதான தாக்குதல் குறித்து துருக்கி பிரதமருடன் ஆலோசனை செய்ய உள்ள நிலையில் எர்தோகான் இவ்வாறு கூறியுள்ளார்.
துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல் சன்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று மீண்டும் கோரியுள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பராக் ஒபாமா பொறுப்பேற்றவுடன் உடனடியாக பாலஸ்தீனப் பிரச்சனையில் தலையிட்டு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இஸ்ரேலுடன் அதிக உறவு வைத்திருக்கும் நாடு துருக்கி என்பது குறிப்பிடத் தக்கது.
0 comments