காஸா நகரை நெருங்குகிறது இஸ்ரேலிய இராணுவம்
Published on ஞாயிறு, 11 ஜனவரி, 2009
1/11/2009 07:15:00 PM //
உலகம்
கடந்த 16 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை 860க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவம் காஸா நகரை வேகமாக நெருங்கி வருவதாக செய்திகள் கூறுகின்றன. காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போன்ற பாலஸ்தீனிய குழுக்கள்
இஸ்ரேலிய இராணுவத்துடன் கடுமையாக சன்டையிட்டு வருகின்றன.
பாலஸ்தீனிய குழுக்கள் இஸ்ரேலிய நகரைக் குறிவைத்து ராக்கெட் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 80க்கும் மேற்பட் இஸ்ரேலிய இராணுவத்தினர் காயமுற்றதாகவும் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 2 இராணுவ வீரர்கள் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய குழுக்கள் கூறி உள்ளன.
LAW எனப்படும் டாங்கர் எதிர்ப்பு ஆயுதம் மற்றும் சில ஆயுதங்களையும் பாலஸ்தீனிய குழுக்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 comments