சாய்பாபா கோயில் சுவர் தங்க அலங்காரம்
Published on ஞாயிறு, 11 ஜனவரி, 2009
1/11/2009 08:24:00 PM //
இந்தியா
ஷீரடியில் ஸ்ரீ சாய்பாபா சிலையைச் சுற்றி உள்ள நான்கு சுவர்களும் தங்கத் தகடுகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக 50 கிலோ தங்கம், 50 கிலோ வெண்கலம், 250 கிலோ தாமிரம் ஆகியவை உபயோகிக்கப் படுகின்றன. இந்தப் பொருள்களை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆதிநாராயண ரெட்டி என்ற வணிகர் சாய் சனாதன் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக அளித்ததாகக் கூறப்படுகிறது.
பெங்களூரைச் சேர்ந்த ராஜா அழகர் என்பவர் இதனை வடிவமைத்தார். இவர் ஏற்கனவே திருப்பதி பாலாஜி போன்ற கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு இவரது மனைவி சாய்பாபாவிற்கு தங்க சிம்மாசனம் வழங்குவதாக கனவு கண்டு அதனை சாய்பாபாவிடம் கூற அதைச் செய்து தரும்படி சாய்பாபா கூறினார். சுமார் 100 கிலோ தங்கத்தில் 90 கோடி ரூபாய் செலவில் அழகரின் வடிவமைப்பில் செய்து சாய்பாபாவுக்கு காணிக்கையாக அளித்தார்.
இந்தியாவிலேயே சாய்பாபா கோயில் திருப்பதிக்கு அடுத்து செல்லவமிக்கதாகும். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 81 கோடி ரூபாய், 120 கிலோ தங்கம் மற்றும் 440 கிலோ வெள்ளி ஆகியவை சாய்பாபா கோயிலுக்கு காணிக்கையாகக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.