போதைப் பொருளுடன் காவல்துறை உயர் அதிகாரி கைது
Published on திங்கள், 26 ஜனவரி, 2009
1/26/2009 05:24:00 PM //
இந்தியா,
போதைப் பொருள்,
மும்பை,
ATS,
India,
Mumbai,
Narcotics
ஞாயிற்றுக் கிழமை மும்பை தீவிரவாத தடுப்பு காவல் படை (ATS) 12 கிலோ ஹெராயின் வைத்திருந்த ஜம்மு கஷ்மீர் படைப்பிரிவைச் சார்ந்த இந்திய காவல் பணியின் (IPS) அதிகாரி ஒருவரைக் கைது செய்துள்ளது.
ஷாஜ்ஜி மோகன் என்றறியப்படும் அந்த அதிகாரி திங்கள் கிழமை அதிகாலையில் வடக்கு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்ட்ட ஹெராயினின் மதிப்பு இந்திய சந்தையில் 12 இலட்சம் எனவும் வெளிநாட்டுச் சந்தையில் 1கோடியே 20 இலட்சம் எனவும் தீவிரவாத தடுப்புப் படையின் தலைமை அதிகாரி ரகுவன்ஷி கூறினார்.
ஜனவரி 17ஆம் தேதி ஹரியானா காவல்துறையால் 1.500 கிலோ ஹெராயின் கைது செய்யப் பட்ட ராகேஷ் குமார் மற்றும் விக்கி ஓபராய் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மோகன் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து போதைப் பொருள் மட்டுமின்றி மடிக்கணினி ஒன்றும் சில சிடிகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஷஜ்ஜி மோகன் சண்டிகரில் போதைப் பொருள் தடுப்புத் துறையில் தொகுதி இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார். இன்று மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக இவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி இவரை இம்மாதம் 30ஆம் தேதிவரி காவல்துறையின் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.
0 comments