லாஹூர் குண்டு வெடிப்பு : இந்தியர்
Published on வியாழன், 25 டிசம்பர், 2008
12/25/2008 10:01:00 AM //
உலகம்
பாகிஸ்தானின் லாஹூர் நகரில் அரசு அலுவலர் குடியிருப்பில் நேற்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சுதீஷ் ஷர்மா என்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் மூன்றுபேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.