36 ஆயிரம் கோடி கருப்பு பணம்?
Published on புதன், 31 டிசம்பர், 2008
12/31/2008 03:04:00 PM //
இந்தியா
புனேயைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் அலி கான் மீது 36 ஆயிரம் கோடி கருப்புப் பணம் வைத்திருந்த ஏன்று விளக்கம் கேட்டு அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டத்தின் (FEMA) படி அறிக்கை (Show cause Notice) அனுப்பப் பட்டுள்ளது. ஹசன் அலி தற்போது போலி பாஸ்போட்டு வழக்கின் சிறையில் இருக்கிறார். இந்த அறிக்கையை அமலக்கப் பிரிவின் சிறப்பு இயக்குநர் நாகேஸ்வர ராவ் ஹசன் அலியின் புனே மற்றும் மும்பை வீடுகளில் இன்று அளித்தார்.
இவரது வீட்டை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2007 ஆம் ஆண்டு சோதனை இட்டபோது UBS என்ற சுவிஸ் வங்கியில் 8,000.45 மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பு வைத்திருந்ததை அறிந்தனர்.
அவருக்கெதிரான இக்குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்டால் அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டத்தின் (FEMA) படி அதிகபட்சமாக சுமார் 1.08 இலட்சம் கோடிகள் வரை அபராதம் விதிக்க முடியும்.
0 comments