தா. பாண்டியன் கார் எரிப்பு
Published on: வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 //
கம்யூனிஸ்டு,
தமிழகம்,
தா.பாண்டியன்,
Communist,
Tamilnadu
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் காரை சிலர் தீவைத்து எரித்துள்ளனர். அவரது கார் பெருமளவு சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் நடந்தபோது தா.பாண்டியன் தர்மபுரியில் இருந்தார். இலங்கை பிரச்சனையில் இந்திய அரசையும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்தது மட்டுமின்றி இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக தா. பாண்டியன் கூறியிருந்தது நினைவு கூரத் தக்கது.



