Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தில்லி பாட்லா ஹவுஸ் பகுதியில் நள்ளிரவு சோதனை, போலீஸ் மக்கள் மோதலால் பரபரப்பு

Published on: சனி, 18 பிப்ரவரி, 2012 //

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தி.மு.க.வேட்பாளர் அறிவிப்பு!

Posted: 17 Feb 2012 11:13 AM PST

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தி.மு.க.வேட்பாளர் அறிவிப்பு!தமிழக அமைச்சராக இருந்த செ.கருப்பசாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் இதனையொட்டி, சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்த  மாதம் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி வீட்டில் சோதனை

Posted: 17 Feb 2012 07:55 AM PST

கொலை மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட 4 வழக்குகளில்  சிக்கி தமிழக மீன்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு: மீண்டும் ஒத்திவைப்பு

Posted: 17 Feb 2012 03:44 AM PST

கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் புவனகிரி, புதுக்கோட்டை கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். 'இதற்கு சட்டதில் அனுமதி இல்லை ' எனக் கூறி தி.மு.க.வை சேர்ந்த முன்னாள்  எம்.பி குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.


தமிழக அரசு மாணவர்களை ஏமாற்றுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 16 Feb 2012 11:31 PM PST

ஒவ்வொரு ஆண்டும் 9.2 லட்சம் லேப்-டாப் வழங்குவதாக தேர்தலின் போது வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 3 லட்சம் லேப்-டாப்கள் மட்டுமே வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது மாணவர்களை ஏமாற்றும் செயலாகும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொன்,ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


தமிழக எம்.பி.க்களிடம் ஒற்றுமை இல்லை: திருமாவளவன் ஆதங்கம்

Posted: 16 Feb 2012 11:14 PM PST

கடந்த ஆண்டு டிசம்பர் 30ந் தேதி தாக்கிய தானே புயலால் பாதித்த தமிழகத்திற்கு நிவாரண நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.


அதிகரிக்கும் மின்வெட்டு - இரு கட்சிகளுமே ஒன்றும் செய்யவில்லை: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

Posted: 16 Feb 2012 11:03 PM PST

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,


தமிழக மின்வெட்டு முறையில் நேர மாற்றம் அறிவிப்பு

Posted: 16 Feb 2012 10:57 PM PST

தமிழகத்தில் வரலாறு காணாத அளவு மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதால் பொது மக்கள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மினிவெட்டில் நேரமாற்றத்தை கொண்டு வந்துள்ளது இது வரும் 20-ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் என தெரிகிறது.


தமிழில் கையெழுத்து இல்லை – ஊதியமும் இல்லை: தமிழக அரசு அதிரடி

Posted: 16 Feb 2012 10:45 PM PST

அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்றும் தமிழில் கையெழுத்திடாத அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராணி தெரிவித்தார்.


தில்லி பாட்லா ஹவுஸ் பகுதியில் நள்ளிரவு சோதனை, போலீஸ் மக்கள் மோதலால் பரபரப்பு

Posted: 16 Feb 2012 10:33 PM PST

புது தில்லி : சமீபத்திய உத்தரபிரதேச தேர்தல்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பட்லா ஹவுஸ் என்கெளண்டரை நினைவுபடுத்தும் விதத்தில் புது தில்லி ஜாமியா நகரில் உள்ள பாட்லா ஹவுஸ் பகுதியில் காவல்துறையின் நள்ளிரவு சோதனையால் வெகுண்டெழுந்த மக்கள் காவல்துறையுடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 16 Feb 2012 10:40 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}


நாங்கள் தவறு செய்யவில்லை: பலான படம் பார்த்த முன்னாள் அமைச்சர்கள் கடிதம்

Posted: 16 Feb 2012 09:22 PM PST

கர்நாடகவில்  பாரதிய ஜனதா  கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்  கிருஷ்ண பாலேமர் ,லட்சுமண் சவதி, சி.சி.பட்டீல், ஆகிய 3 பேரும் அமைச்சர்களாக பதவி வகித்தபோது, சட்டசபையில் செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்த காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆயின.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!