Published on திங்கள், 19 மார்ச், 2012
3/19/2012 12:02:00 PM //
இந்தியா சாதனை வெற்றி - பாகிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது Posted: 18 Mar 2012 09:42 AM PDT  ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியை அதிரடியாக வீழ்த்தியுள்ளது . இந்திய அணி இரண்டாவதாக பேட் செய்து 326 ரன்கள் குவித்து வெற்றி பெற்ற சாதனையை தற்போதைய 329 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி முறியடித்துள்ளது.    |
மார்ச் 26 - தமிழக நிதிநிலை அறிக்கை Posted: 18 Mar 2012 07:05 AM PDT |
கிரிக்கெட்-இந்தியாவுக்கு இலக்கு 330 Posted: 18 Mar 2012 06:46 AM PDT  மிர்புர்:ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றி பெற 330 ரன்களை பாகிஸ்தான் இலக்காக நிர்ணயித்துள்ளது.    |
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு 75% Posted: 18 Mar 2012 06:27 AM PDT  சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் சுமார் 75 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப் பட்டுள்ளது.    |
அழகிரியின் கலைஞர் தி.மு.க? Posted: 18 Mar 2012 06:29 AM PDT  நடிகை குஷ்பூ தி.மு.க.விற்கு பிரச்சாரம் செய்வதை விமர்சனம் செய்யும் தமிழருவி மணியன் போன்றோர், நடிகை ஜெயலலிதா முதல் அமைச்சராக இருப்பதை விமர்சிக்காதது ஏன்? - நூர் மைந்தன், துபை குஷ்பூ"நடிகை" என்பதால் தமிழருவி மணியன் அவரை விமர்சிக்கவில்லை; மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் நிகழ்ச்சியில் குஷ்பூவை முன்னிலைப்படுத்தியதையே விமர்சித்துள்ளார். ''திமுக தலைவர் கருணாநிதி தமிழுக்காக எதையும் செய்ய வில்லை. ஈரோட்டில் தமிழுக்காக உயிர் நீத்தவர்களின் நினைவு நாள் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்க அனுப்பப் பட்டவர் நடிகை குஷ்பூ. திமுக எத்தனையோ அறிஞர்களை பார்த்துள்ளது. இன்று குஷ்பூவை முன்னிலைப் படுத்தி திமுக பிரச்சாரம் செய்வதன் மூலம் அக்கட்சியின் தரத்தை அறிந்து கொள்ள முடியும்." என்று அவர் கூறியுள்ளார். அது அவரது கருத்துச் சுதந்திரம்.    |
ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் : ஆர்.எஸ்.எஸ் Posted: 18 Mar 2012 05:57 AM PDT  புது தில்லி : இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நாவில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தும் நிலையில் அதற்கு முரணாக இலங்கை மீதான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.    |
பெண்களை இழிவுபடுத்திய குஷ்பூ ஐ.நா.வில் பேசலாமா? Posted: 11 Mar 2012 08:45 AM PDT |
துபையில் நகைச்சுவையால் கவர்ந்த சிறுவர்கள் Posted: 18 Mar 2012 04:10 AM PDT  துபாய் : உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளையின் மார்ச் மாத கூட்டம், அல் கிசைஸ் ஆப்பிள் இண்டெர்நேசனல் பள்ளியில் 16.03.2012 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.    |
அரசுக்கெதிராக புரட்சி - பாக்.மக்களுக்கு ஜவாஹிரி அழைப்பு Posted: 18 Mar 2012 03:59 AM PDT |
உங்களுக்குத் தெரியுமா...? Posted: 18 Mar 2012 03:18 AM PDT  1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?    |
குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை- மும்பை காவல்துறை தமிழகம் விரைந்தது. Posted: 18 Mar 2012 02:22 AM PDT  மும்பையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் மற்றும் மீனவர் அடையாளத்தை உறுதிப்படுத்த மும்பை போலீசார் கன்னியா குமரி புறப்பட்டுச் சென்றனர்.    |
இந்தியா - பாக். மோதல்! வெல்லுமா இந்திய அணி? Posted: 18 Mar 2012 01:28 AM PDT  வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.    |
கருணாநிதி போராளி அல்ல - ராமதாஸ் கடும் தாக்கு! Posted: 18 Mar 2012 12:33 AM PDT  திமுக தலைவர் கருணாநிதி உண்மையிலேயே போராளியாக இருந்தால் தீக்குளிக்கப் போகிறேன் என்றெல்லாம் பேச மாட்டார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.    |
சங்கரன்கோவிலில் ஓட்டு இல்லாத வேட்பாளர்கள். Posted: 17 Mar 2012 10:25 PM PDT  சங்கரன்கோவிலில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை விறுவிறுப்புடன் துவங்கியது, முக்கிய கட்சிகள் உட்பட 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.    |
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 17 Mar 2012 10:12 PM PDT இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) {saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}    |
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்-வாக்குபதிவு துவங்கியது. Posted: 17 Mar 2012 09:53 PM PDT  சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இன்று காலை வாக்குப் பதிவு துவங்கியது.இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது இந்த தொகுதியை சார்ந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உற்சாகத்துடன் வாக்களித்தார்.    |
Tags: