Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"அல் ஜெஸீரா நடுநிலை தவறுகிறதா?" அதிர்ச்சித் தகவல்!

Published on புதன், 14 மார்ச், 2012 3/14/2012 10:43:00 AM //

"அல் ஜெஸீரா நடுநிலை தவறுகிறதா?" அதிர்ச்சித் தகவல்!

Posted: 13 Mar 2012 02:31 PM PDT

"மத்தியகிழக்கு நாடுகளின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் "அல்ஜெஸீரா" செய்திச் சேவை ஒருதலைப்பட்சமாகச் செயற்படுகின்றது" எனக் குற்றஞ்சாட்டி, மத்திய கிழக்கின் மற்றொரு முன்னணிச் செய்தி நிறுவனமாகிய "ப்ரஸ்" தொலைக்காட்சிச் சேவை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.


கிரிக்கெட்-இந்தியா அசத்தல் வெற்றி!

Posted: 13 Mar 2012 11:06 AM PDT

மிர்புர்: ஆசியக் கோப்பைக்கான இந்தியா,இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் (50 ஓவர்)கிரிக்கெட் போட்டியில் இந்தியா இலங்கை அணியை 50 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.


தேசிய‌ புகையிலை எதிர்ப்பு தின‌ விழிப்புண‌ர்வு பேரணி!

Posted: 13 Mar 2012 10:41 AM PDT

தேசிய‌ புகையிலை எதிர்ப்பு தின‌ விழிப்புண‌ர்வு பேரணி!திருவாரூர் : திருவாரூர் பார‌கான் பாராமெடிக்க‌ல் & கேட்ட‌ரிங் க‌ல்லூரியின் சார்பில் தேசிய‌ புகையிலை எதிர்ப்பு தின‌மான‌ மார்ச் 14 ஆம் தேதி காலை 9.30 ம‌ணிக்கு திருவாரூர் இர‌யில் நிலைய‌ம் அருகில் இருந்து புகையிலை இல்லாத‌ புதுயுக‌ம் ப‌டைத்திட‌ மாணவ‌ர்க‌ள் ம‌ற்றும் பொதும‌க்க‌ள் க‌லந்து கொள்ளும் மாபெரும் விழிப்புண‌ர்வு பேர‌ணி ந‌டைபெற‌ இருக்கிற‌து.


டெல்லி குண்டு வெடிப்பு: பத்திரிகையாளர் காசிமி கைதுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

Posted: 13 Mar 2012 11:30 AM PDT

டெல்லி குண்டு வெடிப்பு: பத்திரிகையாளர் காசிமி கைதுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!டெல்லி: டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் மூத்த பத்திரிகையாளர் காசிமியைக் கைது செய்ததை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கண்டனம் செய்துள்ளது.


மாயாவதியின் சொத்து ஆண்டுக்கு பன்னிரண்டுகோடி வீதம் உயர்வு!

Posted: 13 Mar 2012 10:26 AM PDT

மாயாவதியின் சொத்து ஆண்டுக்கு இரண்டுகோடி வீதம் உயர்வு!லக்னோ:  ஓர் ஆசிரியையாக இருந்த மாயாவதி கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து உ பி மாநில முதல்வரானவர். ஆடம்பர அரசியலுக்குப் பேர் பெற்றவர்.


ஐ நா தீர்மானம்: பிரதமர் மவுனம் கலைந்தது!

Posted: 13 Mar 2012 10:16 AM PDT

ஐ நா  தீர்மானம்: பிரதமர் மவுனம் கலைந்தது!டெல்லி:- ஐக்கிய நாடுகள் சபையில்  இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடி  வரும் நிலையில், இலங்கைக்கு எதிரான ஐ நா மனித உரிமைக் கமிஷன் தீர்மானம் குறித்து அனைத்துக் கட்சிகளிடமும் பேசி வருகிறோம் என பிரதமர் மன்மோகன் சிங் தி மு க தலைவர் கருணாநிதிக்குக்  கடிதம் எழுதியுள்ளார்.


ரஜினிகாந்தின் பெயரில் உல்டா செய்தவர் விஜயகாந்த் - ராமராஜன் தாக்கு!

Posted: 13 Mar 2012 09:53 AM PDT

ரஜினிகாந்தின் பெயரில் உல்டா செய்தவர் விஜயகாந்த் - ராமராஜன் தாக்கு!சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச் செல்வியை ஆதரித்து மேலநீலித நல்லூர் பகுதியில் நடிகரும் முன்னாள் எம்.பி யுமான ராமராஜன் நேற்று பிரச்சாரம் செய்தார்.


மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா?

Posted: 13 Mar 2012 09:48 AM PDT

மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா? சென்னை: "இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்" என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி வந்த நிலையில், "தனி நாடு மீதான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை" என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.


பொறுமையாய் இருங்கள், பிஜேபிக்கு சமாஜ்வாதி அறிவுரை

Posted: 13 Mar 2012 09:37 AM PDT

பொறுமையாய் இருங்கள், பிஜேபிக்கு சமாஜ்வாதி அறிவுரைபுது டெல்லி : ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் ஆட்சியை பிடிக்க பிஜேபி அவசரப்படுவது அதற்கு தகுதியல்ல என்றும் ஆட்சியை பிடிக்க ஆசைப்படுவதோடு அதற்காக கடுமையாக உழைக்கவும் முன் வர வேண்டும் என்றும் பிஜேபிக்கு சமாஜ்வாதி அறிவுரை கூறியுள்ளது.


நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷைலேந்திர குமார் பிஜேபி ஆட்சியை பிடிக்க அவசரப்படுவது போல் தெரிகிறது என்றும் ஆனால் ஐந்து மாநில தேர்தல்களில் மக்கள் காங்கிரஸை மட்டுமல்ல பிஜேபியையும் ஏற்க தயாரில்லை என்றே நிரூபித்துள்ளதாக கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கவிழ்க்கும் வேலைகளில் சமாஜ்வாதி நிச்சயம் ஈடுபடாது என்ற குமார் சமாஜ்வாதி உள்ளிட்ட எக்கட்சியும் இடைத்தேர்தலை விரும்பவில்லை என்றும் கூறினார். மேலும் ஆட்சிக்கு ஆசைப்படுவதை விட்டு விட்டு அதற்கான தகுதிகளை வளர்த்து கொள்ள பாஜக முயல வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

 


நாடாளுமன்ற மேலவை நிலை குலைந்தது

Posted: 13 Mar 2012 08:53 AM PDT

டெல்லி: இலங்கையில் நடந்த தமிழர் இனப்படுகொலை குறித்த விவாதத்தால் மேலவை நிலைகுலைந்தது. தமிழகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாகக்  குரலெழுப்பியபோது அவர்களுடன் இடதுசாரிகளும் பா ஜ கவும் இணைந்து கொண்டதால்  அவை நடவடிக்கைகள் நின்றுபோயின.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 13 Mar 2012 06:39 AM PDT

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


'ஹரீஷ் ராவத்' ராஜினாமா- பிரதமர் அலுவலகம் மறுப்பு

Posted: 13 Mar 2012 06:02 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் அமைச்சராக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜய் பகுகுணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கடவுச்சீட்டு பெற தலாக் சான்றிதழை ஏற்க நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 Mar 2012 03:35 AM PDT

மதுரை : முஸ்லிம் சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்ணுடைய மகளுக்கு "தலாக்" சான்றிதழ் அடிப்படையில் கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட்) வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.


உச்சகட்ட பிரச்சாரம் ஜெ.பங்கேற்கிறார்

Posted: 13 Mar 2012 03:29 AM PDT

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்திற்காக நாளை சங்கரன்கோவில் செல்கிறார்.


முதல்வரை எதிர்த்து பதவி விலகிய பாராளுமன்ற உறுப்பினர்

Posted: 13 Mar 2012 02:57 AM PDT

Vijay Bahugunaஉத்தர்கண்ட் - உத்தர்கண்டில் விஜய் பகுகுணா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.


மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் - பார்லியில் பரபரப்பு!

Posted: 13 Mar 2012 01:20 AM PDT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற மத்திய வேளாண்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் நாடாளுமன்றத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.


16 ஆப்கானியர்களை கொன்ற அமெரிக்கா சிப்பாய்க்கு மரண தண்டனை

Posted: 13 Mar 2012 12:44 AM PDT

வாஷிங்டன் : சமீபத்தில் ஆப்கன் கிராமங்களில் உள்ள வீடுகளில் புகுந்து 16 அப்பாவிகளை கொலை செய்த அமெரிக்க சிப்பாயின் குற்றம்  நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு செயலர் லியோன் பெனட்டா கூறியுள்ளார்.


ஆட்சியாளர்களுக்கு மனமாற்றம் ஏற்பட கோவில், சர்ச்சில் வழிபாடு!

Posted: 13 Mar 2012 12:41 AM PDT

கூடங்குளத்தில் ரஷ்ய தொழில் நுட்பத்துடன் அணுமின் நிலையைப் பணிகள் முடிக்கப் பட்டு உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உதயகுமார் மற்றும் புஷ்பராயன் தலைமையிலான அணுமின் நிலைய எதிர்ப்புக் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்கக் கூடாது என்று மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 12 Mar 2012 10:25 PM PDT

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}


வட மாநிலங்களில் மீண்டும் நில நடுக்கம்

Posted: 12 Mar 2012 10:04 PM PDT

இன்று அதிகாலை இந்தியாவின் வட மாநிலங்களில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தலைப்புச் செய்திகள்(13/03/2012)

Posted: 12 Mar 2012 09:28 PM PDT

கையாலாகாத சட்டங்கள்!கையாலாகாத சட்டங்கள்!

மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவின் கூடுதல் இயக்குனராகச் சென்னையில் வேலை பார்த்து வந்தவர் ராஜன். பரபரப்பான பல கடத்தல் வேட்டைகளை நடத்திப் பலகோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களைப் பிடித்து நாளேடுகளிலும் தொலைகாட்சிகளிலும் செய்திகளால் பிரபலமானவர்.






Tags:

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!