»
இந்தியாவில் காவல்துறை மத சார்பாக உள்ளது : பிரசாந்த் பூஷன் குமுறல்
Published on செவ்வாய், 28 பிப்ரவரி, 2012
2/28/2012 10:12:00 AM //
சங்கரன் கோவில் இடைத் தேர்தல் - வெற்றிபெறப் போவது மதிமுகவா? திமுகவா? Posted: 27 Feb 2012 10:30 AM PST |
மதுரை - தலைக்கவசம் கட்டாயம் Posted: 27 Feb 2012 09:09 AM PST |
இந்தியாவில் காவல்துறை மத சார்பாக உள்ளது : பிரசாந்த் பூஷன் குமுறல் Posted: 27 Feb 2012 11:14 AM PST  புது தில்லி : அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரும் உச்சநீதி மன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் நாடெங்கும் உள்ள காவல்துறை வகுப்பு வாத மயமாகி உள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.    |
"ஒத்துழைப்பு கொடுங்கப்பா" - தமிழக,கேரள அரசிற்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் Posted: 27 Feb 2012 08:44 AM PST முல்லைப் பெரியாறு விவகாரம் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் நியமித்த குழு, மாநில அரசுகள் தங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையில் முறுகல் நிலை நிலவுகிறது. இந்த அணையின் பாதுகாப்பு பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் குழு ஒன்றினை அமைத்தது. இதற்கு இரண்டு மாநில அரசுகளும் ஒத்துழைப்பு தர மறுப்பதாக கண்காணிப்புக்குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகமும், கேரளாவும் கண்காணிப்புக்குழுவிற்கு ஒத்துழைப்பு தரும்படி உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. கண்காணிப்புக்குழு அணையின் பாதுகாப்பு குறித்த அறிக்கையினை ஏப்ரல் 30 ஆம் திகதிக்குள் வழங்கும்படி உச்சநீதிமன்றம் முன்னர் தெரிவித்திருந்தது. தற்போது தங்களுக்கு கூடுதல் நேரத்தினை வழங்க வேண்டும் என கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளதால் இது பற்றிய விசாரணையை மே 4 ஆம் திகதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.    |
கோத்ரா நினைவு தினத்தில் மோடியை புகழும் பாஜக! Posted: 27 Feb 2012 08:27 AM PST |
பிறந்தநாள் பரிசு கிடைக்கவில்லையே!:எடியூரப்பா வருத்தம் Posted: 27 Feb 2012 07:54 AM PST  கர்நாடக பா.ஜ.க.வில் சண்டை உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கட்சி தலைமை மீது கடும் வருத்தத்தில் உள்ளார்.    |
குர்ஆன் எரிப்பு எதிரொலி - ஆப்கான் விமானநிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் Posted: 27 Feb 2012 07:11 AM PST |
ஆஸ்கார்: 'இஸ்ரேலை வென்றது ஈரான்'! Posted: 27 Feb 2012 06:46 AM PST |
மாண்ட பெண்மணி மீண்டார் - காதில் விழுந்த காதல்மொழியால்! Posted: 27 Feb 2012 06:01 AM PST |
உலகின் சக்தி வாய்ந்த நாடு கத்தார்! Posted: 27 Feb 2012 05:29 AM PST |
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 27 Feb 2012 05:31 AM PST இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)
   |
கோட்டாறு: மாணவிக்கு கேக் ஊட்ட வாலிபர்கள் போட்டி; கைகலப்பு Posted: 27 Feb 2012 03:08 AM PST  கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டாறு தொடர்வண்டிநிலையத்தில் நேற்று இரவு மாணவி ஒருவரைச் சூழ்ந்துகொண்டு மூன்று வாலிபர்கள் கேக் ஊட்டுவதற்குப் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த 'வீக்'கான விஷயத்திற்காக வாலிபர்களுக்கிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியதால் அங்கிருந்த ஒரு பயணி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.    |
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் Posted: 27 Feb 2012 02:33 AM PST  மும்பை : இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் மோதவுள்ள ஆசியகோப்பைக்கான கிரிக்கெட் அணி வரும் 29ம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து சொதப்பி வரும் வீரர்கள் நீக்கப்படலாம் எனதெரிகிறது.    |
சங்கரன் கோவிலில் ஐந்துஇலட்சம் ரூபாய், வேன் பறிமுதல் Posted: 27 Feb 2012 01:03 AM PST தமிழகத்தில் சங்கரன் கோவில் தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொகுதியில் 6 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனை நடத்தப்படுகிறது. இஃதன்றி வருவாய் துறையினர் அடங்கிய பறக்கும் படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் மட்டும் தடையிலா மின்சாரம் எப்படி சாத்தியமாகிறது என்றும் தேர்தல் ஆணையம் வினா எழுப்பியுள்ளது. ஞாயிறு மாலை சங்கரன்கோவில் தொகுதி நாலுவாசல் கோட்டை சோதனைச்சாவடியில் பறக்கும் படை தாசில்தார் சாந்தகுமாரி தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு வேனை மறித்து சோதனை நடத்தியதில் அதில் ரூ.5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வாகனம் ஓட்டி வந்த மானாமதுரையைச் சேர்ந்த குமார் என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவர் மரக்கடைக்கு அப்பணத்தைக் கொண்டுச் செல்வதாக தெரிவி்த்தார். ஆனால் அதற்கான ஆவணம் இல்லாததால் பணம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு குருவிகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.    |
" கென்டக்கி கர்னல் " மு.க. ஸ்டாலின்! Posted: 27 Feb 2012 12:49 AM PST அமெரிக்க அமைப்பு ஒன்று முன்னாளில் அந்நாளும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு "தங்கத் தாரகை" விருது அளித்திருந்தது. அவ்வகையில் அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய ''கென்டக்கி கர்னல் விருது' திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படுகிறது. கென்டக்கி கர்னல் விருதைப் பெற்றவர்கள் ''மாண்புமிகு'' என்ற அடைமொழியைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கச் சட்டப்படியும் பிற உலகநாடுகளில் ராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961ம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் படியும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய ''கென்டக்கி கர்னல் விருது'முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு' வழங்கப்படுகிறது என்று அந்த மாகான ஆளுநர் ஸ்டீவன் எல். பெஷேர் அறிவித்துள்ளார். கென்டக்கி மாகாண ஆளுநரின் செயலாளரும், உலக அமைதிக்கான தூதருமான ஜார்ஜ் ரீப் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்திதில் இந்த உயரிய விருது குறித்து தகவல் அளித்து, வாழ்த்தும் தெரிவித்துள்ளார். தங்களது சுயநலமற்ற சேவைக்காக கென்டக்கி மாகாணத்தின் உயரிய விருது பெற்றமைக்கு வாழ்த்துகிறேன் என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஸ்டாலின் அளித்த ஊக்கமும், வழிகாட்டுதலும், மகளிர் முன்னேற்றத்திற்கான அடிப்படையாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சமுதாய சேவையாற்றுபவர்களுக்கு வழிகாட்டும் விளக்காக அமைந்துள்ளதாகவும், சமூக சேவர்களுக்கு ஸ்டாலின் செயல்பாடுகள் உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விருது பெறும் முதல் தமிழக அரசியல் தலைவரான ஸ்டாலின் ஒரு தன்னலமற்ற சமுதாய சேவகர், புதிய மாற்றங்களுக்கான சிறந்த சிந்தனையாளர் இவ்விருதைப் பெற்றதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விருதானது மக்கள் முன்னேற்றத்திற்கு ஸ்டாலின் ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம் என்றும் இவ்விருதைப் பெற்றதன் மூலம் இவ்விருதுக்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் கூறி வாழ்த்தியுள்ளார். இந்த விருதை கென்டக்கி மாநில ஆளுநரும், வெளியுறவுச் செயலாளரும் கையெழுத்திட்டு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது    |
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 26 Feb 2012 10:41 PM PST இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)
   |
மின்சார கனவு...! Posted: 26 Feb 2012 08:46 PM PST தலைவர்: இலவச மின்சாரம் தருவோம்னு சொல்லியும் எப்படி எனக்கு டெபாசிட் போனது? தொண்டர்: எதிர்கட்சி வேட்பாளர் தடையில்லா மின்சாரம் தருவேன்னு சொல்லி ஓட்டுகேட்டாராம்! *******    |
தலைப்புச் செய்திகள்(27/02/2012) Posted: 26 Feb 2012 08:24 PM PST செயற்கை முறை கருத்தரித்தலுக்கு போப்பாண்டவர் எதிர்ப்பு! "இனப்பெருக்கம் செய்வதற்கு திருமணம் என்கிற வழிமுறையையே மேற்கொள்ள வேண்டும். செயற்கை முறை கருத்தரிப்பு (IVF) இயற்கைநெறிக்கு முரணானவை" என்று கத்தோலிக்கர்களின் தலைமை குருவான போப்பாண்டர் பெனடிக்ட் கருத்து தெரிவித்துள்ளார்.    |
Tags: