திண்டுக்கல் மாவட்டம் தேவிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பவுர்ணமி தினத்தன்று, நிலாவிற்கு மனைவியாக சிறுமியை அனுசரிக்கும் வினோத திருவிழா நடந்து வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தர்மபுரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் தர்மபுரி ரோட்டரி அரங்கில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் கலந்து கொண்டார்.
சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் உள்ள ஒரு கோவில் கொடை விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சப்பர ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் அந்த பகுதியில் உள்ள மசூதி அருகே வந்தபோது கூட்டத்திலிருந்து மசூதிமீது யாரோ செருப்பு வீசினர்.
"மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் புகைப்படம் எடுக்கக்கூட தகுதி இல்லாத விஜயகாந்த், அரசியல் ஆதாயத்துக்காக அவர் பெயரை உச்சரித்து வருகிறார்" என்று தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை நடிகர் ராமராஜன் தாக்கியுள்ளார்.
"சங்கரன்கோவிலில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வரும் இடைத்தேர்தலைப் புறக்கணிப்போம்" என மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 07.02.2012 செவ்வாய்க்கிழமை மாலை கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்றது.
பனாஜி: கர்நாடகாவில் தங்கள் கட்சியின் அமைச்சர்கள் சட்டசபையில் பலான படம் பார்த்தது கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்றும் பலான படம் பார்த்ததற்கு ஏன் பலானதை செய்ததை போல் பார்க்கிறீர்கள் என்றும் கோவா பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
துபாயில் சென்னை கிரஸெண்ட் உறைவிடப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை ஈடிஏ ஸ்டார் ஹவுஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆளும் கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்களும் ஆபாச படம் பார்த்ததாக எதிர்கட்சி தலைவி மோட்டம்மா திடீர் குற்றச்சாட்டை வீசியுள்ளார்.
ஆசிரியை கொலை நடந்த செயின்ட் மேரிஸ் பள்ளியின் வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் இன்று மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடல் போன்று, கற்பனையெல்லாம் தாண்டிநிற்கும் மாபெரும் திடல்போன்று, பரந்துவிரிந்திருக்கிறது இணையத்தின் மடல்வெளி. இவ்வெளியில் நல்ல பல மீன்களையொத்த செய்திகள், தகவல்கள் இவற்றுடனே தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் ஊறு விளைவிக்கும் விஷ ஜந்துக்களும் உலா வருகின்றன.
சட்டப்பேரவை நிகழ்ச்சியினிடையே கைப்பேசியில் ஆபாசபடம் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கர்நாடக பாஜக அமைச்சர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என அன்னா ஹஸாரே கோரிக்கை விடுத்துள்ளார்.
"ஆட்சி மாறிய போதும் காட்சி மாறவில்லை" என தமிழகத்தில் நிலவிவரும் தொடர் மின்வெட்டு குறித்து தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தமிழக அரசைக் கிண்டல் செய்துள்ளார்.
பாகிஸ்தான் போராளி அமைப்புகளான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு தடை விதிக்கப்பட்ட சிமி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்ற அமைப்பின் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின்னர் நடந்த கலவரம் பரவுவதற்கு மோடி அரசின் மவுனமும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசின் மெத்தனமுமே காரணம் என குஜராத் உயர் நீதிமன்றம் மோடி அரசின்மீது குற்றம்சாட்டியுள்ளது.
0 comments