மைக்ரோஸாப்ட் நிறுவனத்தில்
அமெரிக்க கணிணி நிறுவனமான மைக்ரோஸாப்ட் தமது ஊழியர்களில் 5000 பேரை வேலையிலிருந்து நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. அவர்களில் 1400 பேர் உடனடியாகவும் மற்றவர்கள் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாகவும் நிறுத்தப் படுவர். மெதுவடைந்திருக்கும் பொருளியல் சூழலும் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்தில் செலவிடும் தொகை வெகுவாகக் குறைந்து விட்டதுமே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்தது. மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை அந்நிறுவனத்தின் நிகர இலாபம் கடந்த...