பா.ஜ.க.வும் கூட்டணிக் கட்சிகளும்
Published on வெள்ளி, 6 மார்ச், 2009
3/06/2009 01:59:00 PM //
இந்தியா,
தேர்தல் 2009,
பா.ஜ.க.,
BJP,
Election 2009,
India
பாரதீய ஜனதா கட்சியுடன் புதிய கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகள் விரைவாக ஒத்துக் கொள்ளப்படும் அதேவேளை, அதன் பழைய கூட்டணிக் கட்சிகளுடன் உடன்பாடு முடிவுறாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.
ஹரியாணாவில் இந்தியா தேசிய லோக் தள் கட்சியுடனும், உத்திரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியுடனும், அசாமில் அசாம் கன பரிஷத் கட்சியுடனும் புதிதாக கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகள் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையின் அதன் பழைய கூட்டணிக் கட்சிகளான, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், ஒரிசாவின் பிஜு ஜனதா தளம், மகாராஷ்டிராவின் சிவ சேனா ஆகிய கட்சிகளுடன் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.
அசாமில் மொத்தம் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிய 8 இடங்களிலும், அசாம் கன பரிஷத் 6 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அசாம் கன பரிஷத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். ஆனால் அசாம் கன பரிஷத் தலைவர் சந்திர மோகன், தங்கள் கட்சி என்.டி.ஏ.வில் சேரவில்லை எனவும், பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட விரும்புகிறது. ஒரிசா சட்டபைக்கு மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 100 தொகுதிகள் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படாவிட்டால் தங்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று கூறியுள்ளது. சரத் பவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிஜு ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
0 comments