Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

Published on: வெள்ளி, 24 மே, 2013 // , ,
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் கருதப்பட்டாலும், மாநில அரசின் இணையதளத்தில் இந்த வசதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.


அலுவலகத்திற்குள் காகிதங்கள் இல்லாமலே தகவல் பரிமாற்றம் செய்வதற்காக கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துறைகளின் உயரதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரியும்கூட இணையதளத்தில் தரப்பட்டுள்ளன ஆனால், மின்னஞ்சல் மூலம் ஒரு தகவலைக் கேட்டால், அதற்குப் பதில் கிடைப்பது இல்லை.பெயரளவுக்குதான் கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளனவே தவிர, மக்களுக்கு நேரடியாக பயன் ஏதும் கிடைக்கவில்லை தமிழக அரசின் இணையதளத்தில், அன்றைய நாளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் பற்றி செய்திகள் இடம்பெற்றுள்ளன பொது மக்களுக்குப் பயனுள்ள தகவலாக அமையும் அரசாணைகள் என்ற ஓர் இணைப்புப் பகுதியும் அந்த இணையதளத்தில் உள்ளது அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் ஆணைகளில் நேரடியாக மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் இருப்பவை எல்லாம் துறைவாரியாக இதில் சேர்க்கப்படும் ஓரிரு துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகள் ஓராண்டு வரை இந்தப் பகுதியில் புதிய அரசாணைகளைச் சேர்க்காமலே உள்ளன மாநிலத்தில் மின்வெட்டு காரணமாக மக்க ளின் அதிருப்தியை சம்பாதித்துள்ள எரிசக்தி துறையின் பட்டியலில் அரசாணையின் ஆங்கி லப் பக்கங்கள் 2008 அக்டோபர் 8-ம் தேதி வரை சேர்க்கப்பட்டுள்ளன. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் தீவிரமாக எழுப்பப்படுகிறது. ஆனால், முதல்வருக்கு மிக நெருக்கமான வர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆர்க்காடு வீராசாமியின் துறையில் வரும் இந்த இணைய தளத்தில் தமிழ் அரசாணைகள் 22.10.2002க்குப் பிறகு சேர்க்கப்படவே இல்லை போக்குவரத்துத் துறையில் ஆங்கில ஆணை கள் 13.11.2007-க்குப் பிறகும், தமிழ் ஆணைகள் 1.10.2003-க்குப் பிறகும் புதியவை சேர்க்கப்படவில்லை கூட்டுறவுத் துறையில் 2008 பிப்ரவரி வரை மட்டுமே அரசாணைகள் சேர்க்கப்பட்டுள்ளன தமிழ் வளர்ச்சித் துறையில் ஆங்கில அரசாணைகள் 12.12.2006-க்குப் பிறகு சேர்க்கப்படவில்லை. தமிழ் ஆணைகள் 2008 மார்ச் 10-ம் தேதி வரை சேர்க்கப்பட்டுள்ளன இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறையின் ஆங்கில அரசாணைகள் 28.5.2008 வரை மட்டுமே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன பிற துறைகளின் அரசாணைகள் ஒன்று முதல் 6 மாதங்கள் வரை சேர்க்கப்படாமல் உள்ளன உயர் கல்வித் துறையின் ஆணைகள் 2.7.2008 வரையிலும், தகவல் தொழில்நுட்பத் துறை ஆணைகள் 20.9.2008 வரையிலும் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளன இணையதள வசதி வந்ததும் உடனுக்குடன் தகவல்களை பொதுமக்கள் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும் அந்த நோக்கத்தில்தான் அரசு இணையதளத் தில், அரசாணைகள் குறித்த இணைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் முழு மையாக நிறைவேறவில்லை அன்றாட நிகழ்வுகள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் மட்டுமே உடனுக்குடன் புதுப்பிக்கப்படுகின்றவே தவிர, மக்கள் விரும்புகிற நேரத்தில் அரசு உத்தரவு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதியை இந்த இணையதளத்தால் தர முடியவில்லை அதுவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறிவரும் மாநிலம் என்ற நிலையில் இப்படியொரு நிலை இருப்பது வருத்தம் தருகிறது என, இணையதளத்தில் தகவல்களைத் தேடி சிரமப்பட்ட கணினி மென் பொருள் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்த ஆணைகள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும் வகையில் இருந்தால்தான் நிர்வாகம் வெளிப்படையானதாக இருக்கும் என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறினார்.

கைபரில் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானில் இருக்கும் அமெரிக்க கூட்டுப் படையினருக்கு உணவு மற்றும் இராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லும் முக்கிய வழியான கைபர் பாதையில் தாலிபான் ஆதரவாளர்கள் தங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இவ்வழியே பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர். கடந்த வாரத்தில் சுமார் 200க்கும் அதிகமான வாகங

போலி என்கவுண்டர்: காவல்துறைக்கு எதிராக நீதிமன்றம்!

போலி என்கவுண்டர்கள் நடத்தும் காவல்துறையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என ஆந்திரபிரதேச உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


தற்பாதுகாப்புக்காகவே கொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது எனில், அதற்கான உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான சக்தியைக் காவல்துறையினர் உபயோகிக்கக் கூடாது எனவும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளவர்களுக்கு எவருடைய உயிரையும் எடுப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

மாவோவாதிகள் தாக்குதலில் 6 போலீசார் பலி.

பீகாரில் மாவோவாதிகளின் செல்வாக்கு அதிகமுள்ள பாட்னாவுக்கு அருகிலுள்ள பகுதியில் 100க்கு மேற்பட்டோர் இணைந்து காவல்நிலையம் மீது நடத்திய தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். பாட்னாவிலிருந்து 80 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதே பகுதியில் கடந்த வாரம் மாவோவாதிகளின் துப்பாக்கி சூடில் 15 போலீசார் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதியத்தில் அதிருப்தி: விருதுகளை திருப்பி அளித்தனர், முன்னாள் ராணுவத்தினர்

ஓய்வூதியத்தில் அதிருப்தி: விருதுகளை திருப்பி அளித்தனர், முன்னாள் ராணுவத்தினர்

புதுடெல்லி, பிப்.9-

ஆறாவது சம்பள கமிஷனில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ராணுவத்தினருக்கும் புதிய சம்பளம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி பரிந்துரை செய்தது. அதன்படி, ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன வீரர்களுக்கு குறைவாகவும் அதன் பிறகு உள்ளவர்களுக்கு சற்று அதிகமாகவும் ஓய்வூதியம் பரிந்துரை செய்யப்பட்டது.

இதனால், முன்னாள் ராணுவத்தினர் அதிருப்தி அடைந்தனர். `ஒரே பதவி, ஒரே சம்பளம்` என்று வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் தொடர் உண்ணாவிரதம் நடத்தினர். எனினும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, பணியில் இருந்தபோது அளிக்கப்பட்ட வீர தீர செயல்களுக்கான விருதுகளை திருப்பி அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று கூடி தங்களுடைய விருதுகளை ஒன்றாக சேர்த்தனர். பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் அந்த விருதுகளை ஒப்படைத்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது தவிர, 10 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்னாள் ராணுவத்தினர் சங்க துணை தலைவர் சத்பிர் சிங் தெரிவித்தார்.

அங்கன்வாடி மையம் மூடல்: குழந்தைகள் பாதிப்பு

அங்கன்வாடி மையம் மூடல்: குழந்தைகள் பாதிப்பு

பரமக்குடி, பிப். 9: பரமக்குடி அருகே, வேந்தோணி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிராமத் தலைவர் நாகேந்திரன் தெரிவித்தார்.

வேந்தோணி அங்கன்வாடி மையத்தில் பணியாளர் மற்றும் உதவியாளர் என இருவர் வேலைபார்த்து வந்தனர். இதில், பணியாளர் நாகேஸ்வரி 2 மாத விடுப்பில் சென்றுவிட்டார். உதவியாளர் குழந்தைகளைக் கவனித்து வந்தார்.

இந் நிலையில், இங்கு பணியாற்றிவந்த உதவியாளரை பரமக்குடி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் காமராஜர் நகர் பகுதிக்கு மாற்றிவிட்டார். இதனால், குழந்தைகளுக்கு தொடர்ந்து சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்க முடியாமல் அங்கன்வாடி மையம் மூடப்பட்டுவிட்டது.

இதனால், குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பங்கு வணிகத்தில் பாரக் ஒபாமா 248000 டாலர்கள் இழப்பு

அமெரிக்க அதிபர், ஒபாமா, அதிபராக பதவியேற்குமுன் முதலீடு செய்து இருந்த பங்கு வணிகத்தில் 248000 அமெரிக்க டாலர்களை இழந்து விட்டதாக அவர் சார்பாக வெளியிடப்பட்ட அவரின் சொத்து சம்பந்தமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாலு,பாஸ்வானுக்கெதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை-காங்கிரஸ்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப்பொவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனில் சர்மா தெரிவித்தார்.


கடந்த 5 ஆண்டுகளாக ஐ.மு. கூட்டனி அரசை வெற்றிகரமாக செயல்படுத்த உதவியதற்க்கு நன்றிக்கடனாக, இந்த இரு தலைவர்களையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது!

இந்தியா கடற்படைக்குச் சொந்தமான சாப்பர் வகை ஹெலிகாப்டர் ஒன்று கோவா கடற்கரைப் பகுதியில் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த மூவர் எந்தப் பிரச்சனையுமின்றி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவா கடற்கரையிலிருந்து 22 மைல் தொலைவில் இன்று காலை 11 மணி அளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதிலிருந்த இராணுவத்தினர் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டனர். அவர்களுக்குச் சிறிய அளவில் காயமேற்பட்டடதாகவும், அவர்கள் கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதிமுக வுடன் கூட்டணி அமைக்க பாமக பொதுக்குழுவில் ஆதரவு!

வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதனை முடிவு செய்வதற்காக பா.ம.க பொதுக்குழு கூடியது.பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது, அதில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்க 2453 பேரும் தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க 117 பேரும் வாக்களித்தனர். 10 பேர் நடுனிலை வகித்தனர். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு.

இப்பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவைத்தொடர்ந்து கூட்டணியை இறுதி செய்வதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பா.ம.க தலைவர்கள் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

மேம்படுத்தப் பட்ட பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது.


ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று காலை 11.15 மணி அளவில் ஏவப்பட்ட ஏவுகணை 150 விநாடிகளில் இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இராணுவ உயர் அதிகாரிகளான லெஃப்டினன்ட் ஷேகான், லெஃப்டினன்ட் ராவ், மேஜர் திவாரி, பிரமோஸ் திட்டத் தலைவர் சிவதானு பிள்ளை மற்றும் இராணுவ தளவாட ஆராய்ச்சிக் கழக இயக்குநர் வேணுகோபால் ஆகியோர் இச்சோதனையின் போது அங்கிருந்தனர்.


இந்த சோதனையின் மூலம் பிரமோஸ் ஏவுகணையின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் ஏற்கனவே இது இராணுவத்தின் உபயோகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

தேமுதிகவுக்கு முரசு சின்னம்

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது. தங்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை விசாரித்
தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் ஒதுக்க கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொது சின்னம் ஒதுக்க கோரும் வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. விசாரணையின் முடிவில் தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் ஒதுக்கவும், தே.மு.தி.க., போட்டியிடாத இடங்களில் இச்சின்னத்தை மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் எனவும் உத்தரவிட்டது. இதனால் தே.மு.தி.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் சந்தோஷத்தை பரிமாறி கொண்டனர்.

முதலமைச்சரை சந்தித்தார் நடிகர் எஸ்.வி.சேகர்!

நடிகரும், அ.தி.மு.க ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினருமான எஸ்.வி.சேகர் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.அப்போது, பிராமண‌ர் சமுதாய மக்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுத்தார். பிராமணர்களுக்கு இந்த இடஒதுக்கீடு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.


சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர், தமது கோரிக்கையை கனிவுடன் கவனிப்பதாக முதலமை‌ச்ச‌‌ர் கருணாநிதி உறுதியளித்ததாக தெரிவித்தார். இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று அரசிடமிருந்து பச்சைக் கொடி கிடைத்தால் போதும் ; தி.மு.க கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!