Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தீவிரவாதத்தைவிட காலராவே அச்சுறுத்தல் - அ.முத்து கிருஷ்ணன்

Published on: வெள்ளி, 6 ஏப்ரல், 2012 //

தீவிரவாதத்தைவிட காலராவே அச்சுறுத்தல் - அ.முத்து கிருஷ்ணன்

Posted: 05 Apr 2012 01:42 PM PDT

நேற்று துபாயிலுள்ள கராமா-சிவ்ஸ்டார் பவனில் நடந்த ஓர் தமிழ் நிகழ்ச்சிக்குப் பிரபல எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான திரு.அ.முத்து கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். தமிழர் மடற்குழுமங்களில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து நண்பர்களுடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.


அவசர ஊர்தியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு

Posted: 05 Apr 2012 10:32 AM PDT

அவசர ஊர்தியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுசென்னை:இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு, படுத்த படுக்கையாக இருந்த மாணவர், அவசர ஊர்தியில் தேர்வு மையத்துக்கு வந்து எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியுள்ளார்.


லிபியாவில் ஒயாத மோதல்- 29 பேர் பலி

Posted: 05 Apr 2012 09:23 AM PDT

லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ரூ.32,000 கோடி மதிப்புள்ள வக்ஃப் நிலத்தில் அரசு முறைகேடு!

Posted: 05 Apr 2012 08:19 AM PDT

ரூ.32,000 கோடி மதிப்புள்ள வக்ஃப் நிலத்தில் அரசு முறைகேடு!

ஹைதராபாத்: ஆந்திர வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான 1654 ஏக்கர் நிலம் முறைகேடாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆந்திர அரசால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்ட 1654 ஏக்கர் நிலங்கள் அனைத்தும் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானது என்று கடந்த செவ்வாய் அன்று தீர்ப்பளித்துள்ளது.


"சொந்தக்கட்சியினர்தான் எதிரி" - எடியூரப்பா

Posted: 05 Apr 2012 07:29 AM PDT

எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களை விட சொந்தக் கட்சியினர்தான் தமக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


காஷ்மீர் - தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் சுட்டுக் கொலை

Posted: 05 Apr 2012 07:23 AM PDT

காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 05 Apr 2012 06:27 AM PDT

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer}

 


இந்தியாவில் ராணுவப்புரட்சியா? தளபதி வி.கே.சிங்

Posted: 05 Apr 2012 06:04 AM PDT

இந்தியாவில் ராணுவப்புரட்சியா? தளபதி வி.கே.சிங்காட்மாண்டு: இந்தியாவில் இராணுவ புரட்சிக்கு முயற்சி நடந்ததாக சமீபத்தில் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் ராணுவ தளபதி போன்ற உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீது கட்டுக்கதைகளை கூறுவது கண்டனத்திற்குரியது  மேலும் இச்செய்திகள் அடிப்படையில்லாததும் முட்டாள்தனமானதுமாகும் என ராணுவ தளபதி வி.கே.சிங் கூறியிருக்கிறார்.


பிரபல இளம் பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்சி மரணமடைந்தார்.

Posted: 05 Apr 2012 06:06 AM PDT

பிரபல இளம் பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்சி மரணமடைந்தார். நிமோனியா காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா டாவின்சி நேற்று மாலை 7:30 மணியளவில் மரணமடந்தார்.


இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டி வரும்! சீனா கடும் எச்சரிக்கை

Posted: 05 Apr 2012 04:23 AM PDT

இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டி வரும்! சீனா கடும் எச்சரிக்கைபீஜிங்: சீன கடல் பிராந்தியத்திலிருந்து இந்தியா உடனடியாக வெளியேற வேண்டும்  அப்படி வெளியேறாதபட்சத்தில் அதற்கு இந்தியா அதிக விலை கொடுக்க நேரிடும் என சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை அனுமதிக்க முடியாது - உயர்நீதி மன்றம்

Posted: 05 Apr 2012 04:25 AM PDT

கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை அனுமதிக்க முடியாது - உயர்நீதி மன்றம்தற்கால இளந்தலைமுறையினர் இணையத்தில் FACEBOOK,BLOGGER,TWITTER இவற்றில் பொழுது போக்குகிறார்கள் என்றால் கொஞ்சம் பழுத்தவர்கள் மெகாசீரியல்களில் மூழ்கியிருக்கிறார்கள். இந்நிலையில் ஆலயங்களில் நடக்கும் பக்தி திருவிழாக்களில் ரெக்கார்ட் டான்ஸ், காபரே டான்ஸ் போன்ற ஆபாச நடனங்கள் நடத்தப்பட்டு பக்தர்களை பக்திப் பரவசத்துடன் அழைக்கும் உத்தி பிரபலமடைந்து வருகிறது.


அலுவலரை வெட்டிப் போட்டு 2.5கிலோ தங்கம் கொள்ளை

Posted: 05 Apr 2012 01:54 AM PDT

2.5 Kg gold robbed after assault on officerசென்னை கோயம்பேடு அருகே தனியார் நிதி நிறுவன விற்பனை பிரதிநிதியை வெட்டிப் போட்டு இரண்டரை கிலோ தங்கக் காசுகளை கொள்ளை அடித்துச் சென்றஆட்டோ ஓட்டுநரையும் அவரது நண்பரையும் காவல்துறை தேடிவருகிறது.


பணிந்தார் பட்நாயக் - மாவோயிஸ்ட்கள் உள்ளிட்ட 27 பேர் விடுதலை

Posted: 05 Apr 2012 01:14 AM PDT

பணிந்தார் பட்நாயக் -  மாவோயிஸ்ட்கள் உள்ளிட்ட 27 பேர் விடுதலைஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரையும், இத்தாலி நாட்டவரையும் மீட்க சிறையில் உள்ள மாவோயிஸ்ட்கள் உட்பட 27 பேரை விடுவிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.


தாய் வெளியில் அழைத்துச் செல்ல மறுத்ததால் சிறுவன் தற்கொலை

Posted: 05 Apr 2012 01:18 AM PDT

தாய் வெளியில் அழைத்துச் செல்ல மறுத்ததால் சிறுவன் தற்கொலை குவைத்: தனது தாய் தன்னை  வெளியில் அழைத்துச் செல்ல மறுத்ததால் மனமுடைந்த சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் குவைத்தின் ஜஹ்ரா என்ற பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


டாப் 100 தலைவர்கள்; மோடியின் மோசடி!

Posted: 05 Apr 2012 01:07 AM PDT

டாப் 100 தலைவர்கள்; மோடியின் மோசடி!அஹ்மதாபாத்: பிரபல ஆங்கில இதழான 'டைம்' நடத்திவரும் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் தற்போதைய வாக்கெடுப்புக்கான போட்டியில் குஜராத் முதல்வர் மோடி மோசடி செய்திருப்பதாக  குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டியுள்ளார்.


"அரசே! இலவசமாய் இன்வெர்ட்டர் தா!"

Posted: 05 Apr 2012 12:03 AM PDT

நேற்று தமிழக சட்டமன்றத்தில் 2012-13 நிதிநிலை மீதான விவாதம் நடந்தது, அவ்விவாதத்தில் பொதுவுடமைக்கட்சி (இடது)  உறுப்பினர் சவுந்தரராஜன் பேசுகையில்,   இலவச மிக்ஸி கிரைண்டர் வழங்குவதோடு, இலவச இன்வெர்ட்டரும் வழங்கலாம் என்று யோசனை தெரிவித்தார்.


லஷ்கர் சயீத் விவகாரம் : ஆதாரமெங்கே? - அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்கிறது

Posted: 04 Apr 2012 11:04 PM PDT

Any proof against saeed? - Pakistan asked Americaலஷ்கர் இ தய்பா   தலைவர்  ஹஃபீஸ் சயீத்  தலைக்கு, பத்து மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பிற்கு, சயீத்துக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் கொடுங்களேன் என்று  பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!