Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அடுத்த ஆண்டு முதல் பறக்கும் காரில் பயணிக்கலாம்!

Published on: வியாழன், 5 ஏப்ரல், 2012 //

2ஜி வழக்கு- ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி வலுக்கிறது

Posted: 04 Apr 2012 02:57 PM PDT

2ஜி வழக்கு- ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி வலுக்கிறது2ஜி வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நெருக்கடி வலுக்கிறது. இவ்வழக்கில் 2 வார காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நாளை லாகூர் வந்து என்னை பாருங்கள் : அமெரிக்காவை கிண்டலடிக்கும் லஷ்கர் தலைவர்

Posted: 04 Apr 2012 12:13 PM PDT

ராவல்பிண்டி : மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் தொடர்புடையவர் என்று இந்தியாவில் தேடப்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையதின் தலைக்கு 10 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா விலை வைத்தது. அதற்கு தன்னிடம் நேரிடையாக பணம் கொடுக்குமாறு அமெரிக்காவை கிண்டலடித்துள்ளார் ஹபீஸ் சையத்.


சொதப்பிய சென்னை , தொடக்க ஆட்டத்தில் மும்பை அபார வெற்றி

Posted: 04 Apr 2012 10:48 AM PDT

சென்னை : சென்னையில் இன்று நடந்த ஐ.பி.எல் 5 தொடக்க ஆட்டத்தில் பரபரப்பான ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் மும்பை அபார வெற்றி பெற்று தன் புள்ளி கணக்கை துவக்கியுள்ளது.


அரச குடும்ப வாரிசின் துறவு வாழ்க்கை - கருணாநிதி

Posted: 04 Apr 2012 10:26 AM PDT

சென்னை - மகாவீரர் ஜெயந்தியையொட்டி ஜைன சமுதயாத்தினருக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அரச குடும்ப வாரிசாக இருந்தாலும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர் மகாவீரர் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.


தீர்மானத்தை எதிர்த்திருந்தால் மன்மோகன் பதவி காலி -இலங்கை அமைச்சர்

Posted: 04 Apr 2012 09:04 AM PDT

கொழும்பு - அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் மன்மோகன் சிங் பிரதமராக நீடித்திருக்க முடியாது என இலங்கை அமைச்சர் டி.யு.குணசேகரா கருத்துத் தெரிவித்துள்ளார்.


பத்ம விருதுகள்-ஜனாதிபதி வழங்கினார்

Posted: 04 Apr 2012 08:41 AM PDT

பத்ம விருதுகள்-ஜனாதிபதி வழங்கினார்பல்வேறு துறைகளை சேர்ந்த 109 பேருக்கான மத்திய அரசின் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் இன்று வழங்கினார்.


டெல்லியை நோக்கி ராணுவம்? பிரதமர் மறுப்பு

Posted: 04 Apr 2012 08:25 AM PDT

டெல்லியை நோக்கி ராணுவம்? பிரதமர் மறுப்புகடந்த ஜனவரி மாதம் டெல்லியை நோக்கி ராணுவம் நகர்ந்ததாக வந்துள்ள செய்தியை பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் மறுத்துள்ளனர்.


கருணாநிதியை பெரியவர் என்று குறிப்பிட்டதற்கு திமுக எதிர்ப்பு

Posted: 04 Apr 2012 05:49 AM PDT


தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதியை பெரியவர் என்று அமைச்சர் ஒDMK Opposes minister's remarks on Karunanidhiருவர் குறிப்பிட்டதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


கர்ப்பிணியிடம் லஞ்சம் வாங்கிய நர்ஸ் கைது

Posted: 04 Apr 2012 03:41 AM PDT

காஞ்சீபுரம்- மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் வசிப்பவர் பிரியங்கா (வயது22). கர்ப்பிணியான இவர் வடகடும்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கர்ப்பகால பரிசோதனைகளை செய்து வந்தார்.


சென்னை புழல் மத்திய சிறையில் SSLC தேர்வு மையம்

Posted: 04 Apr 2012 03:38 AM PDT

த‌மிழக‌த்‌தி‌ல் இ‌ன்று 10ஆ‌ம் வகு‌ப்பு பொது‌த்தே‌ர்வுகள் தொடங்கியுள்ளன. அதில் 52 ‌சிறை‌க்கை‌திக‌ள் எழு‌து‌கிறா‌ர்க‌ள்.


கப்பலில் தப்பிய காதல் ஜோடியை விமானத்தில் தொடர்ந்த பெற்றோர்

Posted: 04 Apr 2012 03:33 AM PDT

அந்தமானைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட்.அவரது 18 வயது மகள் லைலா (பெயர்மாற்றப்பட்டுள்ளது). நெல்லையை சேர்ந்த முத்து நிவாஸ்அலி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதல் விவகாரம் கசிந்ததும் பெற்றோர் கண்டித்தனர். கடந்த 6 மாதங்களாக காதல் ஜோடியை சந்திக்க விடாமல் தடுத்து வந்ததாகத் தெரிகிறது.


பரவும் பன்றிக் காய்ச்சல் - பாதிக்கப்பட்ட சிறுமிகள் தப்பி ஓட்டம்

Posted: 04 Apr 2012 02:23 AM PDT

 

பரவும் பன்றிக் காய்ச்சல் - பாதிக்கப்பட்ட சிறுமிகள் தப்பி ஓட்டம்தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 19 ஆக அதிகரித்துள்ளது.


ஏப்ரல் 7 - முழுநேரமும் வங்கிகள் செயல்படும்

Posted: 04 Apr 2012 02:29 AM PDT

 

டில்லி -  வரும்  ஏப்ரல் 7ம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் முழு நாட்களும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


சென்னை - மும்பை தொடக்க ஆட்டம் ? வெல்லப் போவது யார்

Posted: 04 Apr 2012 02:13 AM PDT

சென்னை - மும்பை தொடக்க ஆட்டம் ? வெல்லப் போவது யார்சேப்பாக்கம் : விமர்சையுடன் இன்று தொடங்கும் ஐ.பி.எல் 5 வது ஆண்டு போட்டியின் தொடக்க ஆட்டமே அனல் பறக்கும் ஆட்டமாய்  இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஊரில் மேனிலைப் பள்ளி நடத்த விரும்புகிறீர்களா? - உதவுகிறது மத்திய அரசு

Posted: 04 Apr 2012 02:07 AM PDT



wish-to-run-higher-secondary-schools-மேல்நிலைப் பள்ளிகளை நடத்த விரும்புகிறீர்களா?  மத்திய அரசே புதிய  திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி தரம்வாய்ந்த  மேனிலைப்பள்ளிகளை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிஅளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு,மத்திய அரசு அழைப்பும் விடுத்துள்ளது.


டில்லியை நோக்கி ராணுவப் படைகள்?

Posted: 04 Apr 2012 02:08 AM PDT

தில்லி - கடந்த ஜனவரி அன்று மத்திய அரசின் உத்தரவின்றி ராணுவப் படைகள் டில்லி வந்ததாக வெளியிடப்பட்ட செய்தி அரசியல் அரங்கில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


ராமஜெயம் படுகொலை - வெளி வருமா மறைக்கப் படும் உண்மைகள்?

Posted: 03 Apr 2012 11:35 PM PDT

 

ராமஜெயம் படுகொலை - வெளி வருமா மறைக்கப் படும் உண்மைகள்?திமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் மார்ச் 29 அன்று மர்ம கும்பலால் கடத்தப் பட்டு படுகொலை செய்யப் பட்டார். கொலையாளிகள் ராமஜெயத்துக்கு சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்து அவரது உடலை கல்லணை அருகேயுள்ள முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர்.


மின் கட்டணம் குறைப்பு - கருணாநிதி கருத்து

Posted: 03 Apr 2012 10:32 PM PDT

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அதிமுக அரசு வரலாறு காணாத அளவில் மின்கட்டண உயர்வை அறிவித்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகளிடமும் மிகுந்த அதிருப்தி நிலவுவதால் தற்போது கொஞ்சம் குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளது.


அமெரிக்காவுக்கு என்னைப்பற்றிய அறிவு கொஞ்சம்கூட இல்லை - சயீத்

Posted: 03 Apr 2012 10:27 PM PDT

பின்லேடனுக்கு அடுத்ததாக அமெரிக்காவின் எரிச்சல் ஹபீஸ் சயீதின்மேல் திரும்பியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மீண்டும் போட்டியிட விரும்பியுள்ள ஒபாமாவுக்கு இந்தமுறை உருப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இல்லை என்பதால், தீவிரவாத அச்சுருத்தல் பூச்சாண்டி காட்டி வாக்குகளை அள்ளத் திட்டமிட்டுள்ளார்.


சமச்சீர் எஸ்எஸ்.எல்.சி.தேர்வு தொடங்கியது.

Posted: 03 Apr 2012 10:15 PM PDT

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்வு இன்று (புதன்கிழமை)துவங்கியது.சமச்சீர் கல்விமுறை அறிமுகப் படுத்தப் பட்ட பிறகு தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் தேர்வு இதுவாகும்.


திவாகரன் ஜாமீனில் மணல் அள்ளிப்போட்ட காவல்துறை

Posted: 03 Apr 2012 09:58 PM PDT

பாபநாசம்:- சசிகலாவின் உறவுகள் மீது காவல்துறை கைது நடவடிக்கைகள் எடுத்துச் சிறையில் அடைத்துள்ளது. சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்த பிறகு , ரிஷியூரில் பெண் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய வழக்கில் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு ,சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. அரசுத்தரப்பு இவரது ஜாமீனுக்கு எதிர்ப்ப்புத் தெரிவிக்கவில்லை. அதனால் அடுத்த பல வழக்குகளிலும் ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் அவர் இருந்த நிலையில் , மணல் அள்ளிய வழக்கில் மீண்டும் திவாகரன் கைது செய்யப்பட்டார்.


அடுத்த ஆண்டு முதல் பறக்கும் காரில் பயணிக்கலாம்!

Posted: 03 Apr 2012 02:39 PM PDT


Flying car:  Reality from next yearகாரில் சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று  நீண்ட போக்குவரத்து நெரிசல். செல்ல வேண்டிய இடத்திற்கு  உரிய நேரத்தில் சென்று சேர்வது சாத்தியமில்லை என்பது தெரிந்துவிட மனம் அப்படியே கற்பனைக்குதிரையை அவிழ்த்துவிடுகிறது. 'இந்தக் காருக்கு மட்டும் இறக்கைகள் இருந்து அதுவும் பறந்து செல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்'. நகரின் மிக மோசமான  போக்குவரத்து நெருக்கடியால் மனம் வெறுத்துப் போனவர்களின் அந்தக் கற்பனை விரைவில், அதுவும் அடுத்த  ஆண்டே நனவாக உள்ளது. உண்மைதான்.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!