ராகுலுக்கு போட்டியாக மோடி :டைம் பத்திரிகை
| ராகுலுக்கு போட்டியாக மோடி :டைம் பத்திரிகை Posted: 17 Mar 2012 02:47 PM PDT |
| சச்சினின் வெற்றியும் இந்தியாவின் தோல்வியும். Posted: 17 Mar 2012 01:59 PM PDT |
| "மின்சக்தி, எரிபொருள் பிரச்சினைகளுக்குத் தீர்வு எங்கே?"- குமுறும் மக்கள் Posted: 17 Mar 2012 01:31 PM PDT |
| இம்ரான் கான் ஒரு சர்வாதிகாரி : சல்மான் ருஷ்டி கடும் தாக்கு Posted: 17 Mar 2012 12:31 PM PDT |
| 95 % முஸ்லீம்கள் வன்முறையை விரும்புவதில்லை : சல்மான் ருஷ்டி Posted: 17 Mar 2012 12:12 PM PDT புது தில்லி :ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்தியா டுடே கான்க்ளேவில் கலந்து கொண்டு பேசிய சல்மான் ருஷ்டி 95 சதவிகித முஸ்லீம்கள் வன்முறையை விரும்புவதில்லை என்றும் தன்னை தடுத்த காங்கிரஸின் தேர்தல் கணக்குகள் பொய்யாகி விட்டதாகவும் குற்றம் சாட்டினார். |
| ரூ.250 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜெனிலியா பெயர் சேர்ப்பு Posted: 17 Mar 2012 11:03 AM PDT |
| அமைப்புகளின் போர்வையில் தீவிரவாத உணர்வாளர்கள் - ஞானதேசிகன் குற்றச்சாட்டு Posted: 17 Mar 2012 09:53 AM PDT
|
| இடைத்தேர்தலில் 86.3 சதவிகித வாக்குப்பதிவு Posted: 17 Mar 2012 09:08 AM PDT |
| டில்லி - துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் Posted: 17 Mar 2012 08:50 AM PDT |
| சங்கரன்கோவிலில் "பெரிய காந்தி" நடமாட்டம் அதிகரிப்பு..! Posted: 17 Mar 2012 08:05 AM PDT காந்தி தேசத்தின் அங்கமான சங்கரன்கோவிலில் நாளை நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்கள பெருமக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி ஓட்டுக்களை அப்படியே அள்ள அரசியல் கட்சிகளால் "பெரிய காந்தி" தொகுதிக்குள் எல்லாவித கட்டுபாடுகளையும் மீறி கொண்டு வரப்பட்டு மும்முரமாக மக்களிடம் நேரடி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. |
| சங்கரன்கோவில் இடைத்தேர்தல் -தயார்நிலையில் வாக்குச்சாவடிகள் Posted: 17 Mar 2012 06:08 AM PDT |
| சென்னை ரயிலில் தலையில்லா முண்டம் Posted: 17 Mar 2012 04:14 AM PDT |
| மம்தா எழுத்து மூலம் வேண்டினால், பதவி விலக தயார் : ரயில்வே அமைச்சர் திரிவேதி Posted: 17 Mar 2012 01:20 AM PDT
கொல்கத்தா : ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணங்களை உயர்த்தியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ரயில்வே அமைச்சர் திரிவேதி பதவி விலக வேண்டுமென்ற மம்தா பானர்ஜியின் கோரிக்கைக்கு, அவர் எழுத்து மூலம் தான் பதவி விலக வேண்டுமென்று வேண்டினால் மாத்திரமே பதவி விலகுவேன் என்று ரயில்வே அமைச்சர் திரிவேதி கூறியுள்ளார். |
| ஒபாமாவை கொல்ல திட்டமிட்ட ஒசாமா ? Posted: 17 Mar 2012 12:55 AM PDT |
| பட்ஜெட் : விலை உயரும், இறங்கும் பொருட்கள் Posted: 17 Mar 2012 12:40 AM PDT
புது தில்லி : மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2012 - 13 ஆம்ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டின் சாதக, பாதகங்களை பற்றிய ஆழமான விமர்சனங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,இந்நேரம் வாசகர்களுக்காக ஒரு சாமானியனை இப்பட்ஜெட் எந்த அளவு பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் பொருட்டு பட்ஜெட்டுக்கு பின் எப்பொருட்களின் விலை உயரப் போகிறது, எப்பொருட்களின் விலை குறைய போகிறது என்பதை பார்ப்போம். |
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 16 Mar 2012 10:24 PM PDT |
| | |

அமெரிக்காவின் பிரபல வாரப் பத்திரிகையான 'டைம்' பத்திரிகை, இந்தியாவின் பாராளுமன்ற தேர்தலில் ப.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப் படுவார் என, அட்டை படத்துடன்கூடிய கவர் ஸ்டோரியில் விளக்கியுள்ளது. 
ரஃபா: கடந்த சனிக்கிழமை (17.03.2012) காஸா - எகிப்து எல்லையில் உள்ள ரஃபா கடவையருகே அணிதிரண்ட நூற்றுக்கணக்கான பலஸ்தீன் பொதுமக்கள், தாம் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் மின்சக்தி, எரிபொருள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழியமைத்துத் தருமாறு எகிப்திய அதிகாரத் தரப்பினரிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புது தில்லி : இந்தியா டுடே கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சல்மான் ருஷ்டி தான் பங்கேற்றதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்த இம்ரான் கானை சர்வதிகாரி என்றும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்காத ஒமர் அப்துல்லா மற்றும் அகிலேஷ் யாதவையும் கடுமையாக தாக்கி பேசினார்.
புது தில்லி :ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்தியா டுடே கான்க்ளேவில் கலந்து கொண்டு பேசிய சல்மான் ருஷ்டி 95 சதவிகித முஸ்லீம்கள் வன்முறையை விரும்புவதில்லை என்றும் தன்னை தடுத்த காங்கிரஸின் தேர்தல் கணக்குகள் பொய்யாகி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
ஹைதராபாத்தில் அஞ்சனிபுத்ரா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்னும் கட்டுமான நிறுவனம் உள்ளது. அந்நிறுவனம் மீது 250 கோடி மோசடி வழக்குத் தொடரப்பட்டதில், அந்நிறுவனத்தின் விளம்பரத்தூதராகப் பணியாற்றிய நடிகை ஜெனிலியா உட்பட ஐவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை - இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கிடையில் எந்த வேற்றுமையும் இல்லை என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார். சில அமைப்புகளில் ஊடுருவியுள்ள தீவிரவாத உணர்வாளர்கள்தான் இந்த பிரச்னையை திசை திருப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம் - கேரள மாநிலத்தில் பிறவம் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 86.3 சதவிகித வாக்குகள் பதிவாகின. இது முன்புள்ள வாக்குப்பதிவுகளை விட மிக அதிகமாகும்.
காந்தி தேசத்தின் அங்கமான சங்கரன்கோவிலில் நாளை நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்கள பெருமக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி ஓட்டுக்களை அப்படியே அள்ள அரசியல் கட்சிகளால் "பெரிய காந்தி" தொகுதிக்குள் எல்லாவித கட்டுபாடுகளையும் மீறி கொண்டு வரப்பட்டு மும்முரமாக மக்களிடம் நேரடி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 
வாஷிங்டன் : தன் இறுதி காலங்களில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொல்ல ஒசாமா பின் லேடன் திட்டமிட்டதாகவும், அமெரிக்கா மீது இன்னொரு தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டதாகவும் சி.என்.என் தெரிவித்துள்ளது. 


