Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இஸ்ரேலியர்களுக்கு ஆயுள்தண்டனை: எகிப்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Published on: செவ்வாய், 13 மார்ச், 2012 //

"சவூதியும் கட்டாரும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கின்றன": சிரியா

Posted: 12 Mar 2012 01:26 PM PDT

டமஸ்கஸ்: கடந்த திங்கட்கிழமை (12.03.2012) சிரிய அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் பயங்கரவாதக் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், அவை உள்நாட்டில் படுகொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சிரியாவின் தொலைத்தொடர்புத் தகவல்துறை அமைச்சர் அத்னான் மஹ்மூத் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலியர்களுக்கு ஆயுள்தண்டனை: எகிப்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Posted: 12 Mar 2012 12:46 PM PDT

கெய்ரோ: கடந்த திங்கட்கிழமை (12.03.2012) எகிப்திய எல்லைக்கு ஊடாக சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கடத்திய குற்றத்துக்காக இரண்டு இஸ்ரேலியர்களுக்கும் ஒரு உக்ரேன் நாட்டவருக்கும் எகிப்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


"ஈரானின் எண்ணெய் நமக்குத் தேவையில்லை" : சவூதி

Posted: 12 Mar 2012 12:09 PM PDT

ரியாத்: கடந்த திங்கட்கிழமை (12.03.2012) "நம்முடைய எண்ணெய்க்குப் பதிலாக ஈரானின் எண்ணெய் வளத்தைப் பிரதியீடு செய்ய வேண்டிய தேவை நமக்கில்லை; அப்படியான ஒரு நிலை வரப்போவதுமில்லை" என்று சவூதியின் எண்ணெய் வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


கோபத்தால் நாற்காலியை தூக்கி வீசிய ராகுல் டிராவிட்

Posted: 12 Mar 2012 12:04 PM PDT

புது தில்லி : ராகுல் டிராவிட் நாற்காலியை வீசி எறிந்தார் என்பது உண்மையில் நம்புவதற்கு கடினமாக தான் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கருக்கு அடுத்து அதிக ரன்களை குவித்த ராகுல் டிராவிட் ஒரு முறை அப்படி செய்துள்ளதாக அவரின் மனைவி புதிய தகவலை தெரிவித்துள்ளார்.


கொலைவழக்கில் ராமதாஸ் அன்புமணியிடம் சிபிஐ விசாரணை

Posted: 12 Mar 2012 12:01 PM PDT

தமிழக வருவாய்த்துறை அமைச்சரான சிவி சண்முகத்தின் உறவினர் ஒருவர் கொலையுண்ட வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் , அவருடைய மகனும் முன்னாள் அமைச்சருமான அன்புமணி ஆகியோரிடம் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.


யார் அடுத்த பிரதமர் – ஸ்பெஷல் அலசல்

Posted: 12 Mar 2012 11:32 AM PDT

தற்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2014ல் தன் பதவி காலத்தை பூர்த்தி செய்யும் போது அடுத்த பிரதமராக யார் வருவர் ? 1 பில்லியன் மக்களின் பிரதிநிதியாக வரும் வாய்ப்பு யாருக்கு இருக்கும் ?


உத்தர்கண்ட் முதல்வராக விஜய் பகுகுணா தேர்வு

Posted: 12 Mar 2012 08:56 AM PDT

உத்தர்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் பகுகுணா பதவியேற்கிறார்.


சவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம்!

Posted: 12 Mar 2012 09:10 AM PDT

சவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம்!ரியாத்: சவூதி தொழிலாளர் அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கை ஒன்றில் சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள்  தங்களது நிறுவனங்கள் பற்றிய (நிடாகத்) நிலை பற்றி அறிவதற்கு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.


திண்டுக்கல் என்கவுண்டர் - கேரளாவைச் சார்ந்தவர் பலி

Posted: 12 Mar 2012 08:41 AM PDT

மதுரை : திண்டுக்கல்லில் கடத்தல் காரர்களை பிடிக்கச் சென்ற காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் கேரளாவைச் சார்ந்த ஒருவர் உயிரிழந்தார்.


ஐ.நா.வை விட மாமியாரே முக்கியம் - குஷ்பு

Posted: 12 Mar 2012 08:20 AM PDT

ஐ.நா.சபை சார்பில் மார்ச் 15 ஆம் திகதி இளைஞர் நலம் பற்றிய சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் தி.மு.க.பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பங்கேற்று மகளிர் முன்னேற்றம் என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்.


பிரபாகரன் மகன் கொல்லப் பட்ட காணொளி ஆதாரம் - புதன் அன்று வெளியிடுகிறது சேனல் 4!

Posted: 12 Mar 2012 07:37 AM PDT

பிரபாகரன் மகன் கொல்லப் பட்ட காணொளி ஆதாரம் - புதன் அன்று வெளியிடுகிறது சேனல் 4!விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மகன்  பாலச்சந்திரன்  சுட்டுக் கொல்லப் பட்ட காணொளி ஆதாரத்தை வரும் புதன் அன்று சேனல் 4 தொலைக் காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாக "இலங்கையின் கொலைக் கலங்கள் - தண்டிக்கப் படாத போர்க் குற்றங்கள்" என்ற ஆவணப் படத்தை எடுத்து வரும்  கெல்லம் மேக்ரே தெரிவித்துள்ளார்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 12 Mar 2012 06:45 AM PDT

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


முறைகேடு புகார் - ஐ.ஜி வீட்டில் சி.பி.ஐ அதிரடிச் சோதனை!

Posted: 12 Mar 2012 05:50 AM PDT

நிதி நிறுவன மோசடிப் புகார் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் ஆயுதப் படை ஐ.ஜி யாகப் பணியாற்றி வரும் பிரமோத் குமார் என்பவரின் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர். 


மின்சார கனவு (பகுதி-3)

Posted: 12 Mar 2012 04:08 AM PDT

தலைவர்: நான் தோற்றது நல்லாதாப் போச்சு!

தொண்டர்: சீரியசாத்தான் சொல்றீங்களா தலைவரே?

தலைவர்: ஆமாம்! ஜெயிச்சா இலவச மின்சாரம் வழங்குவேன்னு வாக்குறுதி கொடுத்திருந்தேன்!

*******


நடிகையை வைத்து காசு பார்க்கும் கிரிக்கெட் சூதாட்டம்!

Posted: 12 Mar 2012 01:56 AM PDT

நடிகையை வைத்து காசு பார்க்கும் கிரிக்கெட் சூதாட்டம்!பிரிக்கமுடியாதது எதுவோ? என்று திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால், கிரிக்கெட்டும் சூதாட்டமும் என்றே எவரும் விடை சொல்லும் அளவுக்கு கிரிக்கெட்டில் 'புக்கி'கள் எனப்படும் சூதாட்டத் தரகர்களின் திருவிளையாடல்கள் வரம்புமீறிவருகின்றன.


கடிதமும் மின்மடலும் பேசிக்கொண்டால்...

Posted: 12 Mar 2012 01:47 AM PDT

கடிதமும் மின்மடலும் பேசிக்கொண்டால்...நலம் நலமறிய ஆவலென
உளமாறச் சொன்ன காலம்
மலையேற மின்மடலே நீதான்
காரணமெனச் சொன்னது கடிதம்...!


கையாலாகாத சட்டங்கள்!

Posted: 12 Mar 2012 01:32 AM PDT

கையாலாகாத சட்டங்கள்!மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவின் கூடுதல் இயக்குனராகச் சென்னையில் வேலை பார்த்து வந்தவர் ராஜன். பரபரப்பான பல கடத்தல் வேட்டைகளை நடத்திப் பலகோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களைப் பிடித்து நாளேடுகளிலும் தொலைகாட்சிகளிலும் செய்திகளால் பிரபலமானவர்.


போலி மது - அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பாஜக குற்றச்சாட்டு!

Posted: 12 Mar 2012 01:10 AM PDT

போலி மது - அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பாஜக குற்றச்சாட்டு!கரூர் : போலி மதுபான தயாரிப்பு கும்பலுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.


குஷ்பூ மூலம் திமுக தரத்தை அறியலாம் - தமிழருவி மணியன் தாக்கு!

Posted: 12 Mar 2012 12:23 AM PDT

சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக் குமாரை ஆதரித்து திருவேங்கடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான தமிழருவி மணியன் கலந்து கொண்டார்.


கடிதம் உதவாது - கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து கருணாநிதி!

Posted: 12 Mar 2012 12:09 AM PDT

``பிரதமருக்கு எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதி தப்பிக்க நினைக்கும் ஜெயலலிதாவின் மாய் மாலத்தை தமிழக மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்'' என்று கருணாநிதி தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 11 Mar 2012 10:34 PM PDT

 

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!