Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மோடியின் நாயை புகைப்படம் எடுத்த பேராசிரியருக்கு 2 வருட ஊதிய உயர்வு ’கட்’

Published on: வெள்ளி, 2 மார்ச், 2012 //

மோடியின் நாயை புகைப்படம் எடுத்த பேராசிரியருக்கு 2 வருட ஊதிய உயர்வு 'கட்'

Posted: 01 Mar 2012 12:47 PM PST

அஹ்மதாபாத்: தீன் தயாள் பல்கலை கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர் ஆஷிஷ் சர்கார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வருகைக்காக போடப்பட்டிருந்த கார்பட்டில் படுத்திருந்த நாயை புகைப்படம் எடுத்ததால் தனக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டு வருட ஊதிய உயர்வை நிறுத்தி வைத்துள்ளதாக குஜராத் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


மின் தடை: ஒருநாள் நட்டம் ரூ.900 கோடி - கந்தசாமி கருத்து

Posted: 01 Mar 2012 02:50 PM PST

மின் தடை: ஒருநாள் நட்டம் ரூ.900 கோடி - கந்தசாமி கருத்துதமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்களில்  40 விழுக்காடு கோயம்பத்தூர் மாவட்டத்தில் தான் உற்பத்தியாகின்றன  என்று தெரிவித்துள்ள கோவை மாவட்ட சிறுதொழில்துறை கழகத்தின் தலைவர் எம். கந்தசாமி தொழிற்கூடப் பகுதிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் மின் தடை அட்டவணைப்படி, கோயம்பத்தூரில் நேற்று (01 03 2012) ஒரு நாள் மின் தடை செய்யப்பட்டதால், ரூ.900 கோடி நட்டம் என்று தெரிவித்துள்ளார்.


உயராது பெட்ரோல் விலை: உறுதி கூறுகிறார் அமைச்சர்

Posted: 01 Mar 2012 02:19 PM PST

உயராது பெட்ரோல் விலை: உறுதி கூறுகிறார் அமைச்சர்மாறி வரும் உலக அரசியல் சூழலால் விரைவில் பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல்,  ஆகிய நாடுகளுக்கிடைபட்ட அரசியலால், இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை ஏறக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.


முஷாரஃப்பை கைது செய்ய பாகிஸ்தான் தீவிரம்

Posted: 01 Mar 2012 01:50 PM PST

முஷாரஃப்பை கைது செய்ய பாகிஸ்தான் தீவிரம்முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பை கைது செய்து பாகிஸ்தானுக்குக் கொண்டு வருவதில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக அந்நாடு பன்னாட்டுக் காவல்துறையின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.


காவலர்கள் தள்ளி விட்டதால் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

Posted: 01 Mar 2012 01:10 PM PST

காவலர்கள் தள்ளி விட்டதால் பரிதாபமாக உயிரிழந்த முதியவர் புது தில்லி : புது தில்லியில் உள்ள தவுலா குவான் காவல் நிலையத்தில் இரு காவலர்களால் தள்ளி விடப்பட்டதால் 66 வயதான முதியவர் அனில் குமார் பரிதாபகரமாக இறந்து போனது பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கேரள மசூதிக்கு அன்வர் இப்ராஹிம் வருகை

Posted: 01 Mar 2012 12:45 PM PST

கேரள மசூதிக்கு  அன்வர் இப்ராஹிம் வருகைமலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், எதிர்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராஹிம் கேரளாவின்  மிகப்பழமையான மாலிக் இப்னு தீனார் ஜும்மா மசூதிக்கு வருகை புரிந்தார்.


மண் புழுதியால் மூடப்பட்ட குவைத் துறைமுகம்

Posted: 01 Mar 2012 11:58 AM PST

மண் புழுதியால் மூடப்பட்ட குவைத் துறைமுகம்சுவைக் : இன்று குவைத்தில் சுவைக் பகுதியில் வீசிய கடும் புழுதி காற்றால் சுவைக் துறைமுகத்தில் எப்பணியும் மேற்கொள்ள முடியாமல் துறைமுகம் இழுத்து மூடப்பட்டதாக குவைத் துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும் 12 பலஸ்தீனர்கள் கைது: ஆக்கிரமிப்பாளர் அராஜகம்

Posted: 01 Mar 2012 11:40 AM PST

மேலும் 12 பலஸ்தீனர்கள் கைது: ஆக்கிரமிப்பாளர் அராஜகம்கடந்த வியாழக்கிழமை (01.03.2012) ஜெனின், அல் ஹலீல், ஸல்ஃபித் பிரதேசங்களில் அடாவடியாக ஊடுருவிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, மேலும் 12 பலஸ்தீனர்களைக் கைதுசெய்து தடுப்புமுகாம்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது.


சிமி அமைப்பினர் ஐவர்களுக்கு சிறை

Posted: 01 Mar 2012 11:08 AM PST

"காஷ்மீர் இந்தியாவின் கொசோவோ" என்ற கட்டுரை இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் பத்திரிகையான "சிம் செய்தி மடலில்" வெளியாகி இருந்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராகவும், கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவை காட்டூர் காவல்துறையினர் 1999 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.


நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கு: அடுத்த மாதம் ஒத்திவைப்பு

Posted: 01 Mar 2012 11:00 AM PST

 

slanderintg case against Nakkeran gopal will be postponed to next monthநக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் வெளியான நக்கீரன் இதழில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விம‌ர்‌சித்து கட்டுரை ஒன்று வெளியாகி இருந்து.


மாட்டுத்தீவன ஊழல்: லாலு, மிஸ்ரா மீது மீண்டும் குற்றப் பதிவு

Posted: 01 Mar 2012 10:51 AM PST

charge sheet filed against laloo and misra for cattle food scandlஊழல் முறைகேட்டில் பெரிதும் பேசப்பட்டது மாட்டுத் தீவன ஊழல். பீகார் மாநிலத்தில் பல கோடி மதிப்புள்ள தீவன ஊழல் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர்களான லல்லு பிரசாத் யாதவ், ஜகன்னாத் மிஸ்ரா  ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.


பெட்ரோல் குடித்து விட்டு, புகைத்தவர் பரிதாப உயிரிழப்பு

Posted: 01 Mar 2012 10:40 AM PST

பெட்ரோல் குடித்து விட்டு, புகைத்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.பெட்ரோல் குடித்து விட்டு, புகைத்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அறியாமல் பெட்ரோலைக் குடித்துவிட்டு, அதன்பின்னர் புகைப்பதற்காக தீ பற்ற வைத்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அமெரிக்காவிலுள்ள ஹேவ்லாக் என்னுமிடத்தில் சம்பவித்துள்ளது.


தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

Posted: 01 Mar 2012 10:33 AM PST

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சிஎட்டாத உயரத்திற்குச் சென்றுகொண்டிருந்த தங்கத்தின் விலையில் இன்று சற்றே சரிவு ஏற்பட்டது. இச்செய்தி பணவீக்கம் தந்த ஏக்கத்தால் தூக்கமற்ற உள்ளங்களுக்கு சற்றே சாந்தமளித்தது.


ரஜினி மன்ற வேட்பாளர் மனு தள்ளுபடி

Posted: 01 Mar 2012 10:15 AM PST

rajni fans candidate nomination rejected!இடைதேர்தல் நடைபெற உள்ள சங்கரன்கோவில்  தொகுதியில் வேட்புமனுக்கள்  இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க சில வேட்பு மனுக்கள் தள்ளுபடியாகியுள்ளன.


ஆசியக் கோப்பையில் சேவாக் நீக்கம் ஏன் - பரபரப்பு தகவல்கள்

Posted: 01 Mar 2012 10:07 AM PST

ஆசியக் கோப்பையில்  சேவாக் நீக்கம் ஏன் - பரபரப்பு தகவல்கள்ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அதிரடி தொடக்க ஆட்டக்காரரும், அணியின் துணைத்தலைவருமான வீரேந்திர சேவாக் ஏன் "ஓய்வு" பெற வைக்கப்பட்டார் என்பது குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஸ்டாலின் பிறந்த நாள், கே.எம்.காதர் மொகிதீன் முத்தம் கொடுத்து வாழ்த்து

Posted: 01 Mar 2012 09:48 AM PST

 

ஸ்டாலின் பிறந்த நாள்,  கே.எம்.காதர் மொகிதீன் முத்தம் கொடுத்து வாழ்த்துதமிழ்நாட்டின் முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.


மீண்டும் வெடிக்கிறது முல்லைப் பெரியாறு அணை விவகாரம்

Posted: 01 Mar 2012 09:05 AM PST

 

தென்மாவட்டங்களின் குடிநீர் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு ஆதாரமாக விளங்கிவரும் முல்லைப் பெரியாறு அணையை இடித்து, புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


தேனிலவுக்கு அழைத்துவந்து மனைவியைக் கொன்ற கணவன் தப்பியோட்டம்

Posted: 01 Mar 2012 08:27 AM PST

Honeymoon trip ended as a tragedyதேனிலவைக் கழிப்பதற்காகத் தன் மனைவியை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு அழைத்துவந்த கணவன், அவரது கழுத்தைவெட்டிக் கொடூரமாகக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.


கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்: பேச்சு வார்த்தைக்கு தமிழக அரசு ஏற்பாடு

Posted: 01 Mar 2012 08:51 AM PST

 

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் புதிய வாடகை ஒப்பந்தம்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் 6 நாள் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை குஷ்பு

Posted: 01 Mar 2012 08:12 AM PST

 

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.


வியாபாரிகளிடம் 'கப்பம்' கேட்கும் ஆளும்கட்சி அரசியல்வாதிகள்

Posted: 29 Feb 2012 10:30 AM PST

 

வியாபாரிகளிடம் 'கப்பம்' கேட்கும் ஆளும்கட்சி அரசியல்வாதிகள்ஆளும்கட்சியில் இருக்கும் சில அரசியல்வாதிகள் நாட்டில் உள்ள பிரபல வியாபாரிகளை அச்சுறுத்தி அவர்களிடம் கப்பம் வசூலித்துப் பெரும் பணம் சேர்த்து வருகின்றனர் என்றும், கப்பம் தர மறுப்போரைத் தொடர்ந்து பலவகையிலும் தொந்தரவுபடுத்தி வருகின்றனர் என்றும் இலங்கை சுதந்திரக் கட்சி செயலாளர் நாயகம் மைத்ரிபால சிரிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் நடுநிலை

Posted: 01 Mar 2012 06:22 AM PST

 

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் நடுநிலைஇம்மாதம் 18ந் தேதி நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடுநிலைமை வகிப்பதாக அறிவித்துள்ளது.


20 பலஸ்தீனர்கள் கைது: தொடரும் இஸ்ரேலிய அடாவடி

Posted: 01 Mar 2012 06:05 AM PST

கடந்த புதன்கிழமை (29.02.2012) அதிகாலை மேற்குக்கரை பிராந்தியமெங்கும் அத்துமீறிப் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சுமார் 20 பலஸ்தீனர்களைக் கைதுசெய்து தடுப்புமுகாம்களுக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.


"ஜோர்தான் கரையில் இருந்து பின்வாங்கமாட்டோம்" - லிபர்மேன்

Posted: 01 Mar 2012 05:38 AM PST

"ஜோர்தான்கரையில் இருந்து தம்முடைய படையினர் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை" என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லிபர்மேன் வலியுறுத்தியுள்ளார். 


இலங்கை காதல் மனைவியின் அந்தரங்க காட்சிகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கணவன்!

Posted: 01 Mar 2012 05:30 AM PST

 Husband arrested for publishing wife's naked sex video on Facebook. மதுரை : ஃபேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட இலங்கை காதல் மனைவியுடன் படுக்கையறையில் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து  இணையதள ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கணவனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 01 Mar 2012 05:34 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer}


பிறந்தநாள் கொண்டாடியவர்கள் கைது! ஆய்வாளரை கண்டித்த ஆணையர்

Posted: 01 Mar 2012 05:00 AM PST

கோவை : பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பிறந்த நாள் கொண்டாட முடியும் இந்நிலையில் பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்த, மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் கோவை ஜனதா கட்சி சார்பில் செஞ்சிலுவை சங்கம் அருகே நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


குவைத்: அரசு அலுவலங்களில் மருத்துவ விடுப்பால் 750 கோடி நஷ்டம்!

Posted: 01 Mar 2012 05:21 AM PST

குவைத்தில் அரசு அலுவலங்களில் மருத்துவ விடுப்பால் 750 கோடி நஷ்டம்!குவைத்: 2011 ஆம் ஆண்டு குவைத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் எடுத்த மருத்துவ விடுப்பால் 750 கோடி நஷ்டமடைந்துள்ளதாக குவைத் அரசு அதிகாரி கூறியுள்ளார்.


திருமணமாகாத வாலிபருக்கு நிகழ்த்தப்பட்ட குடும்ப கட்டுப்பாடு!

Posted: 01 Mar 2012 05:09 AM PST

திருமணமாகாத வாலிபருக்கு நிகழ்த்தப்பட்ட குடும்ப கட்டுப்பாடு!போபால் : மத்தியபிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் நடைபெற்ற அரசு மருத்துவ முகாமில் திருமணமாகாத வாலிபருக்கும் சேர்த்து குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.


சீனாவில் இனக் கலவரம் 12 பேர் வெட்டிக்கொலை!

Posted: 01 Mar 2012 04:30 AM PST

சின் ஜியாங்: சீனாவின் வடமேற்கே உள்ள சின் ஜியாங் உய்குர் பகுதியில் துர்க் மொழி பேசும் சிறுபானமையினர் அதிகளவில் வசிக்கின்றனர். ஹன் பிரிவை சேர்ந்த சீன மக்களும் அதிகம் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாகவே இப்பகுதியில் இன கலவரம் அடிக்கடி நடந்து வருகிறது.


பொறியாளர், மருத்துவர்கள் அடங்கிய குடும்பத்தில் மாணவர் தற்கொலை!

Posted: 01 Mar 2012 04:29 AM PST

பொறியாளர், மருத்துவர்கள் அடங்கிய குடும்பத்தில் மாணவர் தற்கொலை!இளம் வயதிலிருந்து சக நண்பர்கள், மாணவர்களிடம் பழக வாய்ப்பில்லாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி, மதிப்பெண்கள் சார்ந்த கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தயார்படுத்தப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் மதுரையில் தற்கொலை செய்து கொண்டார்.


கடத்தப்பட்ட சென்னை மாணவன் துப்பாக்கி முனையில் அதிரடியாக மீட்பு!

Posted: 01 Mar 2012 03:15 AM PST

சென்னை: பெரம்பூரில் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவன் காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டான். சிறுவனை கடத்திய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவருக்குச் சிறை தண்டனை!

Posted: 01 Mar 2012 04:23 AM PST

எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவருக்குச் சிறை தண்டனை!வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்  தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு மூன்று ஆண்டு நான்கு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இந்தியன் ஹஜ் தூதரக அதிகாரிக்கு, பிரிவுபசார நிகழ்ச்சி

Posted: 01 Mar 2012 02:55 AM PST

பதவி உயர்வு பெற்று பாலஸ்தீனத்துக்கு மாற்றலாகும், ஜித்தா இந்தியன் ஹஜ் தூதரக அதிகாரி மேதகு.  B.S.முபாரக் IFS (Indian Foreign Service) அவர்களுக்கு ஜித்தாவில் உள்ள ATM என்ற தமிழ் சமூக அமைப்பின் சார்பில் (29.02.2012) புதன்கிழமை இரவு  பிரிவுபசார நிகழ்ச்சி நடத்தப் பட்டது.


புதுச்சேரி: முதல்வர் – எதிர்க்கட்சி தலைவர் மோதல் முற்றுகிறது

Posted: 01 Mar 2012 02:50 AM PST

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ந் தேதி புதுவை – கடலூர் இடையே கரையைக் கடந்த "தானே புயல்" காரணமாக புதுவை மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு தகுந்த ஒத்துழைப்பை வழங்கவில்லை என்கிற வகையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குற்றஞ்சாட்டி இருந்தார்.


மீனவர்கள் கைது - இந்த தடவை மாலத்தீவு கடற்படையினரால்!

Posted: 01 Mar 2012 12:38 AM PST

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வழக்கம். ஆனால் மாலத்தீவு கடற்படையினரும் தற்போது தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 29 Feb 2012 09:23 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}


கடையநல்லூர் இளைஞர் திருச்சி அருகே விபத்தில் உயிரிழப்பு

Posted: 29 Feb 2012 08:30 PM PST

கடையநல்லூர் இளைஞர் திருச்சி அருகே விபத்தில் உயிரிழப்புதிருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர்  கல்பத் நாயகம் தெருவை சேர்ந்தவர் காஜா மொய்தீன். மணல்மேல் குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றும் இவர் குடும்பத்துடன் இலுப்பூரில் தங்கி இருக்கிறார்.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!