Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

BSNL -ன் மிகக் குறைந்த விலை டேப்லெட்: பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யலாம்!

Published on: திங்கள், 27 பிப்ரவரி, 2012 //

கொல்லப்பட்ட உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப் பட்டது

Posted: 26 Feb 2012 01:00 PM PST

சென்னையை உலுக்கிய வங்கி கொள்ளையர்கள் 5 பேர் வேளச்சேரியில் காவல்துறையினரால் என்கவுன்டர் மூலம் கொல்லப் பட்டனர்.


BSNL -ன் மிகக் குறைந்த விலை டேப்லெட்: பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யலாம்!

Posted: 26 Feb 2012 12:00 PM PST

BSNL -ன் மிகக் குறைந்த விலை டேப்லெட்: பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யலாம்!பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது.


'பிட்' அடித்ததை ஆசிரியரிடம் சொன்னதால் மாணவனுக்கு கைவெட்டு!

Posted: 26 Feb 2012 11:57 AM PST

பிட்' அடித்ததை ஆசிரியரிடம் சொன்னதால் மாணவனுக்கு கைவெட்டு!தேர்வில் பார்த்து எழுதியதை ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்து விட்டானே என்ற ஆத்திரத்தில் 8ம் வகுப்பு மாணவரின் கையை பிளஸ் 1 மாணவர்கள் வெட்டியுள்ள கோரச்சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.


சங்கரன்கோவில் ஜெவுக்குக் கிடைக்குமா?

Posted: 26 Feb 2012 03:29 PM PST

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சுப்பிரமணிய சாமிக்கு அதிமுக்கிய தகவல்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?

கருத்து சுதந்திரம் போனால் சுதந்திர கருத்துப் போகுமா? - மீரான், துபாய்.


இந்தியாவை ஜெயலலிதா ஆளும் காலம் விரைவில் வரும் : அமைச்சர் ஆரூடம்!

Posted: 26 Feb 2012 01:24 PM PST

இந்தியாவை ஜெயலலிதா ஆளும் காலம் விரைவில் வரும் : அமைச்சர் சி.வி.சண்முகம் ஆருடம்விழுப்புரம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக முதல் - அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.


கடலூர் மாவட்டத்தில் புதிய மசூதி!

Posted: 26 Feb 2012 11:15 AM PST

கடலூர் மாவட்டத்தில் புதிய மசூதி!கடலூர் மாவட்டம்,  சிதம்பரம் – கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பி.முட்லூர் ஆணையங்குப்பத்தில் மஸ்ஜிதே முஹம்மத் என்னும் புதிய மசூதி திறப்புவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது.


தூதரக குண்டு வெடிப்பில் ஈரான் தொடர்பு குறித்த ஆதாரங்கள் இந்தியா வசம் உள்ளது : இஸ்ரேல்

Posted: 26 Feb 2012 11:01 AM PST

ஜெருசலம் :பிப்ரவரி 13 அன்று இஸ்ரேல் தூதரக அதிகாரி காரில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் நடத்தப்பட்ட காந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது. இத்தாக்குதலில் பிண்ணணியில் ஈரான் உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்ததும் ஈரான் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் மறுத்தது அறிந்ததே.


இந்தியாவிலிருந்து மட்டுமல்ல உலகிலிருந்தே போலியோவை விரட்டுவோம்: பிரதமர்

Posted: 26 Feb 2012 10:41 AM PST

டெல்லியில் "போலியோ மாநாடு 2012'- என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது, இம்மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்,  பாகிஸ்தான் அமைச்சர் ஹசார் கான் பிஜ்ரானி, நேபாள சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர மகாடோ, இலங்கை சுகாதார துணை அமைச்சர் லலித் திஸநாயகா, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் சுதீப் பந்தோபாத்யாய, எஸ்.காந்திசெல்வன், ரோட்டரி சங்க சர்வதேச தலைவர் கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


அதிகரிக்கும் மோதல்: கர்நாடகா பா.ஜ.க-வில் குழப்பம் நீடிப்பு

Posted: 26 Feb 2012 09:34 AM PST

கர்நாடகத்தில் மீண்டும் முதல்மந்திரி பதவியை கைப்பற்ற முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்காக அவர் தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி அதன் மூலம் பா.ஜனதா மேலிடத்தை மறைமுகமாக எச்சரிக்கை செய்து வருவதாக கூறப்படுகிறது.


கொலை,கொள்ளையர்களின் கூடாரம்தான் நாடாளுமன்றம்!- கெஜ்ரிவால்!

Posted: 26 Feb 2012 09:12 AM PST

நாடாளுமன்ற உறுப்பினர்களை "காலிகள், கயவர்கள், கொள்ளைகாரர்கள், கொலைகாரர்கள்" என கடுமையாக விமர்சித்த அன்னா ஹஸாரே குழுவிலுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.


போதை மருந்து கொடுத்து காரில் மாணவியை வன்புணர்ந்த கும்பல்!

Posted: 26 Feb 2012 08:55 AM PST

போதை மருந்து கொடுத்து காரில் மாணவியை வன்புணர்ந்த கும்பல்!புதுடெல்லி: பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது டெல்லி புறநகர் பகுதியில் பள்ளி மாணவிக்கு போதை மருந்து கொடுத்து 5 பேர் கொண்ட கும்பல் காரில் வைத்து வன்புணர்வு செய்த சம்பவம் தலைநகர் டெல்லியை அதிர வைத்துள்ளது.


அல்ஹஸா நகர தமுமுக முன்னாள் நிர்வாகியின் மகன் மரணம்

Posted: 26 Feb 2012 07:37 AM PST

சவுதி அரேபியா கிழக்கு மாகாணம் அல் ஹஸா நகர  தமுமுக முன்னாள் பொருளாளரும், அல்ஹாஜிரி வாகன உதிரி விற்பனையகத்தின் மேலாளருமான நயீமுல்லாஹ்-வின்  மகனான ஸுப்யான் நேற்று காலை சென்னையில் உயிரிழந்தார்.


மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக ராமகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

Posted: 26 Feb 2012 06:22 AM PST

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மீண்டும் ஜி.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 26 Feb 2012 05:13 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


தமிழ்த்தேர் இத‌ழின் கனவு மற்றும் ஆற்றல் சிற‌ப்பித‌ழ்கள் வெளியீட்டு விழா!

Posted: 26 Feb 2012 07:30 AM PST

துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் இத‌ழின் கனவு மற்றும் ஆற்றல்   சிற‌ப்பித‌ழ்கள் வெளியீட்டு விழாதுபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 56 வது மாத இதழான "கனவு" சிறப்பிதழ் வெளியீடு மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சி  24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.


செயற்கை முறை கருத்தரித்தலுக்கு போப்பாண்டவர் எதிர்ப்பு!

Posted: 26 Feb 2012 05:04 AM PST

செயற்கை முறை கருத்தரித்தலுக்கு போப்பாண்டவர் எதிர்ப்பு!"இனப்பெருக்கம் செய்வதற்கு திருமணம் என்கிற வழிமுறையையே மேற்கொள்ள வேண்டும். செயற்கை முறை கருத்தரிப்பு (IVF) இயற்கைநெறிக்கு முரணானவை" என்று கத்தோலிக்கர்களின் தலைமை குருவான போப்பாண்டர் பெனடிக்ட் கருத்து தெரிவித்துள்ளார்.


மின் தடை காரணமாக அமில மது குடித்தவர் பரிதாப மரணம்!

Posted: 26 Feb 2012 04:45 AM PST

மின் தடை காரணமாக அமில மது குடித்தவர் பரிதாப மரணம்!வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பழனிபேட்டையை சேர்ந்தவர் 53 வயதான வஜ்ரவேலு. இவருக்கு அம்சா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.


ஷாருக்கானின் 'மன்னாட் மாளிகை' குறித்து வழக்குப்பதிவு!

Posted: 26 Feb 2012 04:29 AM PST

ஷாருக் கானின் 'மன்னாட் மாளிகை'  குறித்து வழக்குப்பதிவுபாலிவுட் நாயகன் ஷாருக் கானின் 'மன்னாட் மாளிகை'  குறித்து சர்ச்சையும் வழக்கும் பதியப்பட்டுள்ளன. ஷாருக்கான் தனது மன்னாட் மாளிகையைக்  கட்டும்போது விதிமுறைகளை மீறியதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


துபாயில் த‌மிழ‌ர் பார‌ம்ப‌ரிய‌ க‌ப‌டி விளையாட்டுட‌ன் களைகட்டிய வி.களத்தூர் சங்கமம் 2012!

Posted: 26 Feb 2012 04:10 AM PST

துபாயில் த‌மிழ‌ர் பார‌ம்ப‌ர்ய‌ க‌ப‌டி விளையாட்டுட‌ன் களைகட்டிய துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் பெர‌ம்ப‌லூர் மாவ‌ட்ட‌ம் வி.களத்தூர் மற்றும் மில்லத்நகர் மக்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பாக‌ "வி.களத்தூர் சங்கமம் 2012" என்னும் நிகழ்ச்சி துபாஉ முஸ்ரிப் பூங்காவில் 24-02-2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிமுதல் மாலை 6.00 மணிவரை ந‌டைபெற்ற‌து.


இஸ்ரேலை நிர்மூலமாக்கி விடுவோம்: ஈரான் கடும் எச்சரிக்கை!

Posted: 26 Feb 2012 04:15 AM PST

இஸ்ரேலை நிர்மூலமாக்கி விடுவோம்: ஈரான் கடும் எச்சரிக்கை!"எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பெங்களூர் குண்டுவெடிப்பு: மஹ்தனி மனு நிராகரிப்பு

Posted: 26 Feb 2012 03:58 AM PST

பெங்களூர் குண்டுவெடிப்பு: மஹ்தனி மனு நிராகரிப்புகேரள மாநிலத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சித்தலைவர் அப்துல்நாசர் மஹ்தனி. கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் கைது செய்யப்பட்டிருந்த இவர் பல ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் "குற்றம் நிரூபிக்கப்படவில்லை" என்று கூறி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.


அவமானகரமாக தோற்ற இந்தியா : ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது

Posted: 26 Feb 2012 03:01 AM PST

சிட்னி : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமென்வலெத் சீரிஸ் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் வென்றே ஆக வேண்டிய முக்கிய போட்டியான இன்றைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்தியா  87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் அவமானகரமாக தோற்றது.


என்கவுண்டர் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

Posted: 26 Feb 2012 02:00 AM PST

சென்னையில் உள்ள வேளச்சேரியில் கடந்த 23 ஆம் திகதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் வங்கிக் கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


குடிகாரர்களின் வசதிக்காக காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவு

Posted: 26 Feb 2012 01:41 AM PST

டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்துவதுதான் நடைமுறையில் உள்ளது. இப்போது காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை கூடுதலாக 2 மணி நேரம் கடைகளை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.எஸ்.தியாகராஜன்,பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்,


புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி முதல்வருக்கு சீமான் வேண்டுகோள்

Posted: 26 Feb 2012 01:35 AM PST

விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசு விதித்துள தடையை நீக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


மின்வெட்டு எதிரொலி - பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்

Posted: 26 Feb 2012 01:30 AM PST

தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே தமிழகத்தில் மின்வெட்டு கடுமையாக இருப்பதற்கு காரணம் என ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். மின்வெட்டினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு, ஜெனரேட்டர்களை பள்ளிகளுக்கு வாடகைக்கு பெற்று வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு :


22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை

Posted: 26 Feb 2012 12:46 AM PST

தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


கூடங்குளம் போராட்டத்திற்கு முதல்வர் ஆதரவானவர்

Posted: 25 Feb 2012 11:24 PM PST

தமிழகத்தின் மின்பற்றாக்குறையை சமாளிக்க அனல்மின் நிலையம் அமைப்பது, மாற்று எரிசக்தித் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வலியுறுத்தியது போன்ற முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மூலம் அவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப்போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதையே காட்டுகிறது.


சங்கரன்கோவில்: திமுக வேட்பாளர் மாற்றப்படுகிறார்

Posted: 25 Feb 2012 10:14 PM PST

சங்கரன்கோவில்: திமுக வேட்பாளர் மாற்றப்படுகிறார்சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் மாற்றப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. புதிய வேட்பாளராக  நகராட்சியில்  திமுக உறுப்பினராக உள்ள சங்கர் அறிவிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.


தலைப்புச் செய்திகள்(26/02/2012)

Posted: 25 Feb 2012 09:18 PM PST

கங்கை அமரனை கட்டாயப்படுத்தி சொத்து வாங்கவில்லை: சசிகலா

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நேற்று நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா முன் விசாரணைக்கு வந்தது.


கூடங்குளம் போராட்டக்காரர்களை கொச்சை படுத்திய பிரதமர்மீது வழக்கு தொடருவேன் - உதயகுமார்

Posted: 25 Feb 2012 09:24 PM PST

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக, நாட்டிலுள்ள சிந்திக்கும் திறன் மிகுந்த மக்கள் கூடங்குளம் அணு மின் திட்டத்தின் அவசியத்தை உணர்ந்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.


இடைத்தேர்தல்: கோவில்பட்டியில் 'மினி' அமைச்சரவை

Posted: 25 Feb 2012 09:20 PM PST

தமிழக அரசியல் கட்சிகள் தங்களது இழந்த பலத்தைப் பரிசீலனை செய்யவும் ஆளுங்கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு எந்தளவு உள்ளது என்பதை அறியும் களமாக சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கருதப்படுகிறது. அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வி போட்டியிடுகிறார்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 25 Feb 2012 09:14 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!