Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

குருக்கள் வீட்டில் குண்டு வெடிப்பு? – வெடிகுண்டு பதுக்கலா? ஈரோட்டில் பரபரப்பு!

Published on: வியாழன், 16 பிப்ரவரி, 2012 //

ரஜினி மருமகன் என்பதால் சுய அடையாளம் இழக்கிறேன் - தனுஷ் வருத்தம்

Posted: 15 Feb 2012 02:00 PM PST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளை திருமணம் செய்து அவருடைய மருமகன் என்ற அடையாளத்தை பெற்றதால்  தன்னுடைய சுயமான அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று கொலவெறி புகழ் தனுஷ் புலம்பியுள்ளார்.


யுரேனிய செறிவூட்டல் நேரடி ஒளிபரப்பு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை - ஈரான் அதிரடி

Posted: 15 Feb 2012 11:19 AM PST

தெஹ்ரான் : ஈரான் தெஹ்ரானில் அமைத்துள்ள அணு உலையில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை செய்து வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரிக்க இதை பயன்படுத்துவதாகவும் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்காததால் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை ஈரான் மேல் விதித்தது.


குருக்கள் வீட்டில் குண்டு வெடிப்பு? – வெடிகுண்டு பதுக்கலா? ஈரோட்டில் பரபரப்பு!

Posted: 15 Feb 2012 07:48 AM PST

குருக்கள் வீட்டில் குண்டு வெடிப்பு? – வெடிகுண்டு பதுக்கலா? ஈரோட்டில் பரபரப்பு!ஈரோட்டில் பழைமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் குருக்கள் வீட்டில், நேற்றிரவு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில், வீடு முற்றிலும் சேதமடைந்தது.


தகுதியுள்ளவர்களுக்கே கருணை - காவல்துறைக்கு ஜெ உத்தரவு!

Posted: 15 Feb 2012 07:58 AM PST

தகுதியுள்ளவர்களுக்கே கருணை - காவல்துறைக்கு ஜெ உத்தரவு!"இரும்புக் கரம் கொண்டு கலவரக்காரர்கள், கொலைகாரர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களை ஒடுக்க வேண்டும்" என காவல்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு்ள்ளார்.


மார்ச் முதல் வாரத்தில் பெட்ரோல் விலை உயர்கிறது!

Posted: 15 Feb 2012 07:46 AM PST

மார்ச் முதல் வாரத்தில் பெட்ரோல் விலை உயர்கிறதுமத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமையினை கடந்த 2010- ஆண்டு ஜுன் மாதம் தன்னிடமிருந்து விடுவித்து, எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கி விட்டது.


குஜராத் இனக்கலவர அறிக்கையை ஜாகியாவிடம் வழங்க உத்தரவு!

Posted: 15 Feb 2012 07:33 AM PST

குஜராத் இனக்கலவர அறிக்கையை ஜாகியாவிடம் வழங்க உத்தரவு!2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இனக்கலவரம் சம்பந்தமான சிறப்பு புலனாய்வுக்குழுவின் அறிக்கையை ஜகியா ஜாப்ரிக்கு வழங்க வேண்டும் என அஹ்மதாபாத் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


பொதக்குடி மருத்துவமனை வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும்: மக்கள் மன்றம் கோரிக்கை!

Posted: 15 Feb 2012 07:21 AM PST

பொதக்குடி மருத்துவமனை வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும்: மக்கள் மன்றம் கோரிக்கை!திருவாரூர் மாவட்டம் பொதக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று பொதக்குடி மக்கள் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.


இந்திய அணிக்கு புதிய பந்து வீச்சு பயிற்சியாளர்

Posted: 15 Feb 2012 06:36 AM PST

இந்திய அணிக்கு புதிய பந்து வீச்சு பயிற்சியாளர்இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்துமுன்னணியினரை ஏமாற்றிய காதல் ஜோடி!

Posted: 15 Feb 2012 06:45 AM PST

இந்துமுன்னணியினரை ஏமாற்றிய காதல் ஜோடிஉலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.


இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு வருகிறது: பிரதமர்

Posted: 15 Feb 2012 06:24 AM PST

புதுடெல்லியில் 44-வது இந்திய தொழிலாளர் மாநாடு நேற்று நடந்தது. பிரதமர் மன்மோகன்சிங் இம்மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்  நாட்டின் வளர்ச்சிவீதம் 9 சதவீதத்தை எட்ட வேண்டும். இதை நாம் சாதிப்பதற்கு நிறுவன அதிபர்களும், தொழிலாளர் பிரதிநிதிகளும் கரம் கோர்க்க வேண்டும்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 15 Feb 2012 06:21 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


நகரமன்ற கூட்டத்தில் பா.ஜ.க. உறுப்பினர் மீது குப்பை வீச்சு

Posted: 15 Feb 2012 06:16 AM PST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகராட்சியில் சுயேச்சை கவுன்சிலராக இருப்பவர் நவாப் அலி. இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதையும், உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நகரசபை தலைவரிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.


திமுக: வீரபாண்டி ஆறுமுகம் கழற்றி விடப்படுகிறார்?

Posted: 15 Feb 2012 05:12 AM PST

திமுக: வீரபாண்டி ஆறுமுகம் கழற்றி விடப்படுகிறார்?திமுக தலைமைக்கும் சேலம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இடையேயான கருத்துவேறுபாடு அதிகரித்து வருகிறது.


சங்கரராமன் கொலைவழக்கு - ஆளுநரைச் சந்தித்த ஜெயேந்திரர் பற்றி ஜனாதிபதியிடம் முறையீடு!

Posted: 15 Feb 2012 04:56 AM PST

சங்கரராமன் கொலைவழக்கு - ஆளுநரைச் சந்தித்த ஜெயேந்திரர் பற்றி முறையீடுகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமன் கொலைவழக்கில் தாமதம் ஏற்படுவதைச் சுட்டியும், பிரதான குற்றவாளியான ஜெயேந்திர சரஸ்வதி,


ஷாருக்கான் மேற்கு வங்க அரசின் விளம்பரத் தூதுவர்!

Posted: 15 Feb 2012 04:40 AM PST

ஷாருக்கான் மேற்கு வங்க அரசின் விளம்பரத் தூதுவர்!மேற்குவங்க அரசின் விளம்பரத் தூதுவராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.


என்னைக் கொல்ல சதி - மாலத்தீவு அதிபர் திடுக்கிடும் புகார்

Posted: 15 Feb 2012 04:18 AM PST

மாலத்தீவில் அண்மையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினை அடுத்து அந்த நாட்டின் அதிபராக இருந்த முஹம்மத் நாஷித் பதவி விலகினார். "என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டதால்தான் நான் பதவி விலகினேன்" என தற்போது நாஷித் தெரிவித்துள்ளார்.


மின்வெட்டுக்கெதிராக திமுக ஆர்ப்பாட்டம்: தன்னிச்சையாக அறிவித்தார் வீரபாண்டியார்!

Posted: 15 Feb 2012 04:11 AM PST

மின்வெட்டுக்கெதிராக திமுக ஆர்ப்பாட்டம்: தன்னிச்சையாக அறிவித்தார் வீரபாண்டியார்!"தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டுக்கெதிராக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று திமுக தலைவர்களுள் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார்.


நரிக்குடியில் ஆசிரியருக்கு கொலை மிரட்டல்: இரு மாணவர்கள் கைது!

Posted: 15 Feb 2012 02:01 AM PST

நரிக்குடியில் ஆசிரியருக்கு கொலை மிரட்டல்: இரு மாணவர்கள் கைது!கடந்த வாரம் சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவன் தனது ஆசிரியை வகுப்பறையில் கத்தியால் குத்தி கொலை செய்தான். அந்த நிகழ்வின் சோகம் மறைவதற்குள், விருதுநகர் மாவட்டத்தில் இரு மாணவர்கள் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது மக்களை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.


விவசாயிகள் பிரச்சனையில் எனது ரத்தம் கொதிக்கிறது: தேவகவுடா ஆவேசம்!

Posted: 15 Feb 2012 01:45 AM PST

விவசாயிகள் பிரச்சனையில் எனது ரத்தம் கொதிக்கிறது: தேவகவுடா ஆவேசம்மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின், கர்நாடக சிக்மகளூர் மாவட்ட அளவிலான  மாநாடு நேற்று சிக்மகளூரில்  உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டை முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.


தனி இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Posted: 15 Feb 2012 01:30 AM PST

தனி இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்புஇந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திமுக தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பேன்: மு க அழகிரி

Posted: 14 Feb 2012 11:44 PM PST

திமுக தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பேன்: மு க அழகிரிதிமுக-வின் அதிகார மையங்களுள் ஒருவரும், மத்திய உரத்துறை அமைச்சருமான மு க அழகிரி சென்னை வந்தார். நேற்றிரவு சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் திமுக தலைவர் பதவி தமக்கு அளிக்கப்பட்டால் ஏற்கத் தான் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.


கழுதை-நாய் கல்யாணம்: இந்துமுன்னணியினர் கைது!

Posted: 14 Feb 2012 10:45 PM PST

கழுதை-நாய் கல்யாணம்: இந்துமுன்னணியினர் கைதுகாதலர் தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன் என்ற பெயரில் கழுதைக்கும் நாய்க்கும், அதுபோலவே, நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம் செய்துவைத்த இந்துமுன்னணியினரை காவல்துறை கைது செய்துள்ளது.


சிங்கப்பூர்: தமிழருக்குத் தூக்குத் தண்டனை!(updated)

Posted: 14 Feb 2012 10:30 PM PST

சிங்கப்பூர்: தமிழருக்குத் தூக்குத் தண்டனைதமிழகத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை தீர்ப்பாகியுள்ளது. சக தமிழரை கொலை செய்த குற்றத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


"கழுகுப்படை" காவலர்கள்: தமிழக காவல்துறையில் அறிமுகம்

Posted: 14 Feb 2012 09:34 PM PST

சென்னை நகரில் அதிகரித்து வரும் வழிப்பறி, சங்கிலி பறிப்பு, கொள்ளையர்கள், ரவுடிகளை மடக்கிப்பிடிக்க   `கழுகுப்படை' என்ற புதிய படை அமைக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வீட்டில் ரெய்டு!

Posted: 14 Feb 2012 09:24 PM PST

முன்னாள் அமைச்சர் தங்கம்  தென்னரசு வீட்டில் ரெய்டுமுந்தைய திமுக அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இம்முறை புதிய தொகுதியான திருச்சுழியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 14 Feb 2012 09:19 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


தலைப்புச் செய்திகள்(15/02/2012)

Posted: 14 Feb 2012 08:56 PM PST

தீவிரவாதம் தேவையே!

தீவிரவாதம் தேவையே!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com


1 கோடி ரூபாய் பறிமுதல் - குடியரசு தலைவரின் மகன் மீது குற்றசாட்டு

Posted: 14 Feb 2012 08:18 PM PST

மும்பை உள்ளாட்சி தேர்தலில் விநியோகிப்பதற்காக காரில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 1 கோடி ரூபாயை மும்பை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.





Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!