Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

எழுமிச்சையிலிருந்து மின்சாரம்: மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை!

Published on: புதன், 15 பிப்ரவரி, 2012 //

எழுமிச்சையிலிருந்து மின்சாரம் :மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை!

Posted: 14 Feb 2012 02:48 PM PST

குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.


வெளிநாட்டு வங்கிகளில் 24.5 லட்சம் கோடி கறுப்புப் பணம்!

Posted: 14 Feb 2012 04:31 PM PST

வெளிநாட்டு வங்கிகளில் 24.5 லட்சம் கோடி கறுப்புப் பணம்!இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சுமார் ரூ.24.5 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளதாக சிபிஐ தகவல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் 'கவிஞர் கண்ணதாசன்' பற்றிய சொல்லரங்கம் நிகழ்ச்சி!

Posted: 14 Feb 2012 12:21 PM PST

மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் ' கவிஞர் கண்ணதாசன்' பற்றிய சொல்லரங்கம் நிகழ்ச்சிமஸ்கட்: ஓமான் நாட்டில் உள்ள இந்திய சமூக சங்கத்தின் கீழ் அமைந்துள்ள அனைத்து மொழிசார்ந்த சங்கங்களிலும் மிகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மஸ்கட் தமிழ்ச் சங்கம், 2500 க்கும் அதிகமான குடும்ப தனி நபர் எண்ணிக்கையையும் கொண்டது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 14 Feb 2012 11:23 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


அபுதாபியில் இ.யூ.மு.லீ பதிப்பக அறக்கட்டளை செயலாளருக்கு வரவேற்பு!

Posted: 14 Feb 2012 11:16 AM PST

அபுதாபியில் இ.யூ.மு.லீ பதிப்பக அறக்கட்டளை செயலாளருக்கு வரவேற்பு!அபுதாபி :  அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயிலுக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் 08.02.2012 புத‌ன்கிழ‌மை மாலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


ரஷ்யா எச்சரிக்கை: இந்தியாவுக்கு நெருக்கடி!

Posted: 14 Feb 2012 04:05 PM PST

ரஷ்யா எச்சரிக்கை: இந்தியாவுக்கு நெருக்கடி!"கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்காவிட்டால், ரஷ்ய விஞ்ஞானிகளைத் திரும்ப அழைத்துக் கொள்வோம்" என ரஷ்யா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


டெல்லி குண்டு வெடிப்பில் எந்நாட்டு தொடர்புக்கும் ஆதாரமில்லை : இந்தியா!

Posted: 14 Feb 2012 02:45 PM PST

டெல்லி குண்டு வெடிப்பில் எந்நாட்டு தொடர்புக்கும் ஆதாரமில்லை : இந்தியாபுது டெல்லி: டெல்லியில் பிரதமர் இல்லத்திற்கு அருகில் இருக்கும்  இஸ்ரேலிய நாட்டு தூதரகம் அருகே நின்று கொண்டிருந்த இஸ்ரேலிய தூதரகத்துக்குச் சொந்தமான கார் நேற்று வெடித்துத் தீப்பிடித்ததில் பெண் தூதரக அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் காயமடைந்தது அறிந்ததே.


கூடங்குளம் உதயகுமாரை கைது செய்ய வேண்டும்: வழக்குரைஞர்கள் கோரிக்கை!

Posted: 14 Feb 2012 01:42 PM PST

கூடங்குளம் உதயகுமாரை கைது செய்ய வேண்டும்: வழக்குரைஞர்கள் கோரிக்கை!கூடங்குளம் அணு உலை ஆதரவு வழக்கறிஞர்கள் ஜெயபாண்டியன் பூசைத்துரை, உள்ளிட்ட பலர் தென் மண்டல காவல்துறை தலைவர்  ராஜேஸ்தாசை நேற்று நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.


காயல்பட்டினத்தில் சாலை மறியல்: 140 பேர் கைது!

Posted: 14 Feb 2012 12:37 PM PST

காயல்பட்டினத்தில் சாலை மறியல்: 140 பேர் கைது!தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகர் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மெயின் பஜாரில் ஒரு வழிப்பாதை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.


திருநெல்வேலியில் தொடர் மின்வெட்டு: முஸ்லிம் ஜமாஅத் ஆட்சியருக்கு மனு!

Posted: 14 Feb 2012 11:34 AM PST

திருநெல்வேலியில் தொடர் மின்வெட்டு: முஸ்லிம் ஜமாஅத் ஆட்சியருக்கு மனு!திருநெல்வேலி  பேட்டை பகுதியில் தினமும் 9 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது. காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 10 மணியும், ஆக மொத்தம் 9 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது.


இந்திய குண்டுவெடிப்புக்கு ஈரான் காரணம்: இஸ்ரேல்!

Posted: 14 Feb 2012 08:20 AM PST

இந்திய குண்டுவெடிப்புக்கு ஈரான் காரணம்: இஸ்ரேல்"இந்தியாவில் இஸ்ரேல் கார் குண்டுவெடிப்புக்கு ஈரான்தான் காரணம்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு குற்றம் சுமத்தியுள்ளார்.


சவுதி மன்னர் அப்துல்லாஹ்வை – அமைச்சர் ஏ.கே.அந்தோணி சந்தித்தார்.

Posted: 14 Feb 2012 09:02 AM PST

மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். நேற்று ரியாத் நகரில் சவுதி மன்னர்  அப்துல்லாஹ்வை அமைச்சர் அந்தோணி சந்தித்தார்.


தமிழகம் அடிமைப்பட்டு கிடக்கிறது: சீமான் கோபம்

Posted: 14 Feb 2012 08:04 AM PST

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக நதிநீர் உரிமையை வலியுறுத்தி  திருவாரூரில்  பொதுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,


திமுகவின் இறுதிக்‍காலம் நெருங்கிவிட்டது: மருத்துவர் ராமதாஸ்

Posted: 14 Feb 2012 07:53 AM PST

தீயவர்களின் கூடாரமாக அரசியல் மாறிவருவதால் இளைஞர்கள் அரசியலுக்கு வரத் தயங்குகின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


தீவிரவாதம் தேவையே!

Posted: 14 Feb 2012 06:39 AM PST

தீவிரவாதம் தேவையே!தீவிரவாதம் தேவையே!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

நாட்டில் இருக்கும் சாதி என்னும் சதிவாதம், மதம் பிடித்த மதவாதம் என எத்தனையோ வாதங்களுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளின் புதிய வரவாகவும், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தீவிரவாதத்தை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்தால், அதற்கு நான் எவ்விதத்திலும் பொருப்பேற்க முடியாது.


நடிகை அனன்யாவை ஏமாற்றித் திருமணம் செய்ய முயன்ற தொழிலதிபர்!

Posted: 14 Feb 2012 06:28 AM PST

நடிகை அனன்யாவை ஏமாற்றித் திருமணம் செய்ய முயன்ற தொழிலதிபர்!நடிகை அனன்யாவை ஏமாற்றித் திருமணம் செய்ய முயன்றதாக கேரளாவைச் சார்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழிலதிபர் மீது அனன்யாவின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.


இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)

Posted: 14 Feb 2012 05:36 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)


இந்தியாவின் 20,000 இணையதளங்களை முடக்கினர் பங்களாதேஷ் ஹேக்கர்ஸ்!

Posted: 14 Feb 2012 06:08 AM PST

இந்தியாவின் 20,000 இணையதளங்களை முடக்கினர் பங்களாதேஷ் ஹேக்கர்ஸ்!பங்களாதேஷ் சைபர் ஆர்மி என்னும் இணைய முடக்கர்கள் (ஹேக்கர்ஸ்) இந்தியாவின் அரசு சார்ந்த சுமார் 20,000  இணைய தளங்களை முடக்கிச் சீர்குலைத்த விபரம் தெரிய வந்துள்ளது.


கம்பன் எக்ஸ்பிரஸை மீண்டும் இயக்ககோரி வழக்கு!

Posted: 14 Feb 2012 05:28 AM PST

கம்பன் எக்ஸ்பிரஸை மீண்டும் இயக்ககோரி வழக்கு!சென்னையிலிருந்து காரைக்குடி வரை சென்று வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து கடந்த சில வருடங்களாக நிறுத்தப் பட்டு அந்த பகுதி மக்கள் சென்னைக்கு ரயில் போக்குவரத்து இல்லாமல் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன்ர் இதனால் அந்த பகுதி மக்கள் சார்பாக அதிராம்பட்டினத்தை சார்ந்த மக்கள் சார்பில் பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் போடப் பட்டுள்ளது.


சங்கரன் கோவிலில் வீடு தேடுகிறார் ஸ்டாலின்!

Posted: 14 Feb 2012 05:48 AM PST

சங்கரன் கோவிலில் வீடு தேடுகிறார் ஸ்டாலின்!விரைவில் நடைபெற உள்ள சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி உறுதியாகி உள்ளது. 26 அமைச்சர்கள் என்ற பெரும்படையுடன் அதிமுக தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ள ஜெயலலிதா, தமது கட்சி வேட்பாளராக முத்துச்செல்வி என்பவரை அறிவித்துள்ளார்.


குடிகார கணவனைக் கிணற்றில் வீசினாள் மனைவி!

Posted: 14 Feb 2012 05:19 AM PST

குடிகார கணவனைக் கிணற்றில் வீசினாள் மனைவி!கல்லானாலும் கணவன் என்றிருந்தது அந்தக்காலம். குடித்துவிட்டு வந்து அடாவடித்தனம் செய்தால் கணவனேயானாலும் கல்லைப் போலக் கருதி கிணற்றில் வீசுவது இந்தக் காலம்.


திமுக தலைமையின் எச்சரிக்கை நோட்டீஸ்: அதிர்ச்சியான வீரபாண்டி ஆறுமுகம்!

Posted: 14 Feb 2012 04:25 AM PST

திமுக தலைமையின் எச்சரிக்கை நோட்டீஸ்: அதிர்ச்சியான வீரபாண்டி ஆறுமுகம்!"சேலம் மாவட்ட இளைஞர் அணி தேர்வை நடத்தக்கூடாது என்று திமுக தலைமை அனுப்பிய எச்சரிக்கை நோட்டீஸ் மனதைப் புண்படுத்தி விட்டது" என்று திமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.


பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா-இலங்கை டிரா!

Posted: 14 Feb 2012 04:03 AM PST

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா-இலங்கை டிரா!இந்தியா-இலங்கை-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டித்தொடரில் 5 ஆவது ஆட்டம் இன்று இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடந்தது. பரபரப்பான இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.


பாங்காக்கில் வெடிகுண்டு தாக்குதல் - ஈரானைச் சார்ந்தவர் கைது

Posted: 14 Feb 2012 03:24 AM PST

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று இரண்டு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.


கர்நாடக அமைச்சர் மரணம்

Posted: 14 Feb 2012 02:56 AM PST

கர்நாடக அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா இன்று மாரடைப்பால் காலமானார்.இவருக்கு  வயது 71. இவர் கர்நாடகத்தின் கல்வி அமைச்சராக இருந்தவர்.


ஹெலிகாப்டர் விபத்து..? / நிலநடுக்கம்.? : கடலூர் மாவட்டம் கதி கலங்கியது

Posted: 14 Feb 2012 01:54 AM PST

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கலங்கரை விளக்கம் அருகில் இம்மாதம் 8ந் தேதியிலிருந்து இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 12க்கும் மேற்பட்ட ராணுவ டிரக்குகளில் பல்வேறு உபகரணங்களுடன் வந்திருக்கும் ராணுவ வீரர்கள் பயிற்சி பெறும் பகுதிக்கு பொதுமக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


முஸ்லிம் அமைப்பு வாழ்வுரிமை போராட்டம்!

Posted: 14 Feb 2012 01:08 AM PST

வாழ்வுரிமை போராட்டம்தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வாழ்வுரிமை போராட்டம் இன்று காலை  நடைபெற்றது.


லோக் ஆயுக்தா தமிழ்நாட்டில் அவசியம்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

Posted: 14 Feb 2012 12:03 AM PST

இந்திய ஊழல் எதிர்ப்பு அமைப்பு சார்பில், மக்கள் லோக்பால் சிறப்பு விளக்கம், கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் கோவையில், நடைபெற்றது. நடிகர் கிட்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.


குண்டு வெடிப்பு நினைவு தினம்: கோவையில் பலத்த பாதுகாப்பு

Posted: 13 Feb 2012 10:10 PM PST

குண்டு வெடிப்பு நினைவு தினம்: கோவையில் பலத்த பாதுகாப்புகடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 29ந் தேதி கோவையில் போக்குவரத்து காவலர்   செல்வராஜ் கொலை செய்யப்பட்டதையொட்டி நடைபெற்ற கலவரத்தில் 19 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு நாசமாக்கப்பட்டது.


ரூ 3 கோடி செலவில் சீன மொழியில் திருக்குறளை மொழி பெயர்க்க ஏற்பாடு: துணைவேந்தர் திருமலை

Posted: 13 Feb 2012 09:34 PM PST

ரூ 3 கோடி செலவில் சீன மொழியில் திருக்குறளை  மொழி பெயர்க்க ஏற்பாடு: துணைவேந்தர் திருமலைதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், பழந்தமிழ் இலக்கியங்களில் இசையும், நாட்டியமும் என்ற தலைப்பில் பத்துநாள் பயிலரங்கம் நேற்று துவங்கியது. தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் நிகழ்ச்சியில் உரையாற்றிய துணைவேந்தர் ம.திருமலை உரையாற்றுகையில், "


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 13 Feb 2012 09:27 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


பரபரப்பான சூழ்நிலையில் தே.மு.தி.க.பொதுக்குழு அடுத்த வாரம் கூடுகிறது

Posted: 13 Feb 2012 09:23 PM PST

தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் இருவருக்குமிடையே சட்டப்பேரவையில் நடைபெற்ற கடுமையான விவாதத்தில் மோதல் ஏற்பட்டு அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயகாந்த் பின்னர் சட்டப்பேரவையிலிருந்து 10 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.


Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!