உலகின் பிரமாண்டமான உளவு மையம் அமெரிக்காவில்:திடுக்கிடும் தகவல்!
| உலகின் பிரமாண்டமான உளவு மையம் அமெரிக்காவில்:திடுக்கிடும் தகவல்! Posted: 19 Mar 2012 02:20 PM PDT |
| அகதி முகாமுக்குள் காவல் நாய்கள் மூலம் தேடுதல் வேட்டை Posted: 19 Mar 2012 11:07 AM PDT |
| நித்யானந்தா – ரஞ்சிதா வீடியோ : பரபரப்புக் குற்றச்சாட்டு Posted: 19 Mar 2012 10:35 AM PDT
|
| சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவு Posted: 19 Mar 2012 08:41 AM PDT
|
| அமைச்சரவையில் இருந்து விலகியிருப்போம் - கருணாநிதி! Posted: 19 Mar 2012 06:03 AM PDT
|
| இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் - பிரதமர்! Posted: 19 Mar 2012 05:14 AM PDT |
| இலங்கை ஆயுதக் குழுக்களுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு Posted: 19 Mar 2012 03:45 AM PDT |
| போராட்டக் குழுவினர் கைது - உதயகுமார் தலைமையில் உண்ணாவிரதம்! Posted: 19 Mar 2012 03:30 AM PDT |
| கூடங்குளம் விவகாரம் - தமிழக அரசின் அந்தர் பல்டி Posted: 19 Mar 2012 03:20 AM PDT ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் பல்வேறு அறவழியிலான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவற்றை இருப்ம்புக்கரம் கொண்டு நசுக்கியும்,போராட்டக்காரர்கள்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடுத்தும் அடக்கி வரும்நிலையில், தமிழக அரசு இதுவரை வெளிப்படையாக கருத்து சொல்லாமல் மெளனம் காத்து வந்தது. |
| கிரிக்கெட்டில் ஒளிந்திருக்கும் தேசவிரோதம் Posted: 19 Mar 2012 03:15 AM PDT
|
| மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகுமா? கனிமொழி பதில்! Posted: 19 Mar 2012 02:55 AM PDT |
| தினேஷ் திரிவேதி ராஜினாமா - மம்தாவின் நெருக்கடிக்கு பணிந்தார்! Posted: 18 Mar 2012 11:16 PM PDT |
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 18 Mar 2012 10:44 PM PDT |
| குவைத்திற்கு சேப்டி ஆபிசர், சேப்டி இன்ஜினியர் தேவை Posted: 18 Mar 2012 09:57 PM PDT
அஹ்மதி : குவைத்தில் உள்ள பிரபலமான கட்டுமான நிறுவனத்திற்கு 4 ஆண்டு திட்ட பணிக்கு உடனடியாக சேப்டி ஆபிசர், சேப்டி இன்ஜினியர் தேவைப்படுகிறார்கள். தகுதி உள்ளவர்கள் உடன் தங்கள் பயோ-டேட்டாவை fiverose@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். |

அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு முகவர்நிலையம் உலகிலேயே மிகப் பிரமாண்டமான உளவு மையம் ஒன்றை தற்போது நிறுவி வருகின்றது எனும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அல்-ஹலீல்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.03.2012) அதிகாலை அல்- ஹலீல் பிராந்தியத்தின் ஃபவார் அகதி முகாமைத் திடீரெனத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, தேடுதல் வேட்டை என்ற பெயரில் முகாமுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.
சென்னை : நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனியறையில் படுக்கையில் இருந்த காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையா பொய்யா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவ்வீடியோ பொய் என்று அறிக்கை தருமாறு நித்தியானந்தா தரப்பில் தம்மை வற்புறுத்தியதாக பிரபல தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன் கூறியுள்ளது திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, "தேமுதிகவுக்குத் திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு பலத்தை நிரூபிக்கும்படி" ஜெயலலிதா சவால் விட்ட காரணத்தால் திருச்சி இடைத் தேர்தலில் போட்டியிடாத தேமுதிகவுக்கு இத்தேர்தல் மானப்பிரச்சினையாகி விட்டது.
இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரும், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து இயங்கும் "குடிமக்கள் உரிமைகள் இயக்கம்" என்ற அமைப்பு குரல் கொடுத்திருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று தமிழக அமைச்சரவைத் தீர்மான நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து போராட்டக் குழுவினரை காவல்துறையினர் கைது செயத்துள்ளனர்.
ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் பல்வேறு அறவழியிலான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவற்றை இருப்ம்புக்கரம் கொண்டு நசுக்கியும்,போராட்டக்காரர்கள்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடுத்தும் அடக்கி வரும்நிலையில், தமிழக அரசு இதுவரை வெளிப்படையாக கருத்து சொல்லாமல் மெளனம் காத்து வந்தது.
ஆங்கிலேயர்களின் விளையாட்டான மட்டைப் பந்தாட்டம் (கிரிக்கெட்) குறித்து இன்னொரு ஆங்கிலேயரான ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகையில் "11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் கைதட்டி ரசிக்கும் விளையாட்டு" என்றார். சர்வதேச சூதாட்ட கும்பலின் பிடியில் மட்டைப்பந்து வீரர்கள் இருப்பது உலகுக்குத் தெரியும்வரை ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் கிரிக்கெட் குறித்த விமர்சனத்தை யாரும் சீரியஸாக எடுக்கவில்லை.
''மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து திமுக வெளியேறும் நிலையை மத்திய அரசு உருவாக்காது'' என்று திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்ய சபா எம்.பி யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



