குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி குவைத்
குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி இன்று மூன்று நாள் பயணமாக குவைத் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்திய அரசு சார்பில் உயர் தலைவர் ஒருவர் குவைத் வருகைத் தருவது 28 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.கல்வி, தொழிற்நுட்பப் பங்கீடு முதலியவற்றில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் குடியரசு துணைத்தலைவர் முன்னிலையில் கைச்சாத்திடப்படும் என்று தெரிகிறது.மேலும், கடலோரப் பாதுகாப்பு, தீவிரவாதத் தடுப்புவழிகள், எண்ணெய்வளம் குறித்தும் ஹமீத் அன்சாரி குவைத் அரசுடன் பேச்சுகள் நடத்துவார்...