11 லாரிகள் தீக்கிரை
Published on: வியாழன், 22 ஜனவரி, 2009 //
இந்தியா,
தீவிரவாதம்
பீஹாரில் உள்ள ரோஹ்டாஸ் மாவட்டத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 11 வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.
தங்கள் இயக்கத்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் மாவோ கம்யூனிஸ்டுகள் ஜார்கண்ட், பீஹார், மேற்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். முழு அடைப்புக்கிடையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சிமெண்ட் கல்யாண்பூரில் உள்ள சிமெண்ட் ஆலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டவை என்று கூறிய காவல்துறை அதிகாரி, எரியூட்டுவதற்கு முன் ஓட்டுநரையும உதவியாளரை கீழே இறக்கிவிட்டு எரியூட்டியுள்ளனர் என்று கூறினார். முழு அடைப்பு நடக்கும் போது இரவு நேரத்தில் சிமெண்ட் மூட்டைகளை அனுப்ப வேண்டாம் என்று அந்த ஆலைக்கு காவல்துறை ஏற்கனவே கூறியதாகவும் கூறப்படுகிறது.